Ads (728x90)



10 கார­ணங்கள் இதோ!!
பணிவும் மன­வு­று­தியும் கொண்ட மகிழ்ச்­சி­யாக வாழும் மனி­தர்கள் என்று கூறினால் அதற்கு முன்­னு­தா­ர­ண­மாக திகழ்­ப­வர்கள் ஜப்­பா­னி­யர்­கள்தான். உலகம் அவ்­வா­றுதான் அவர்­களைப் பார்க்­கி­றது. இவ்­வா­றான பண்­புகள் சிறு­வ­யது முதலே ஜப்­பா­னிய சிறார்­க­ளுக்கு ஊட்­டப்­ப­டு­கின்­றது. அதற்கு அவர்கள் தேர்ந்­தெ­டுத்­தி­ருக்கும் இடம் பாட­சா­லை­யாகும். 



அமெ­ரிக்க பாட­சாலைக் கல்விக் கட்­ட­மைப்பு போன்று பாலர் கல்வி, ஆரம்பப் பாட­சாலை, கனிஷ்ட உயர்­நிலைப் பாட­சாலை மற்றும் உயர்­நிலைப் பாட­சாலை என வெளிப்­ப­டை­யாக தோற்­ற­ம­ளித்­தாலும் அவற்றின் உண்மை நிலை முற்­றிலும் மாறு­பட்­ட­தாகும். 
ஜப்­பா­னியப் பாட­சா­லைகள் தனித்­து­வ­மா­னவை என்­பதை அழுத்­தி­யு­ரைக்கும் பத்துக் கார­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன. இத­னால்தான் ஜப்­பா­னியக் கல்வி முறை வியப்­பி­னையும், பொறா­மை­யி­னையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
1. பரீட்­சைக்கு முன்னர், நடத்தைப் பாங்­கினை சிறு­வர்கள் கற்­றுக்­கொள்ளல்.
ஆரம்பப் பாட­சா­லையில் உள்ள மாண­வர்கள் அவர்­க­ளது பிர­தான பாடங்­களை படிக்­கு­மாறு துளைத்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை. விழு­மி­யங்கள் ஒழுக்கம் தொடர்­பி­லேயே அவர்­க­ளது கவனம் திருப்­பப்­ப­டு­கின்­றது.

மென்­மை­யா­கவும் மரி­யா­தை­யா­கவும் நடந்து கொள்­வது எவ்­வாறு என மாண­வர்­க­ளுக்கு கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது. இரக்கம் மற்றும் பரந்த மன­துடன் நடப்­பது தொடர்­பிலும் வழி­காட்­டப்­ப­டு­கின்­றது. 

சுய கட்­டுப்­பாடு, நீதி­யாக நடந்­து­கொள்ளும் முறை சம்­பந்­த­மாக அதிக கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான அடித்­த­ளங்கள் இடப்­பட்டால் மாத்­தி­ரமே கனிஷ்ட உயர்­நிலைப் பாட­சாலை மற்றும் உயர்­நிலைப் பாட­சாலைக் கல்­வியில் பிர­தான பாடங்­களில் சிறந்த அடை­வினை அந்த மாண­வர்கள் பெற்­றுக்­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
   
 2. பாட­சாலைத் தவணை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பம்

ஜப்­பானில் பாட­சாலைக் கல்­வி­யாண்டு வசந்­த­கால தொடக்­கத்­தோடு ஆரம்­ப­மா­கி­றது. இந்தக் காலத்­தில்தான் ஜப்­பானில் சகுரா செர்ரிப் பூக்கள் பூத்துக் குலுங்கும். பனிக்­காலம் முடி­வ­டைந்து ஏற்­படும் வசந்த காலத்தில் பிள்­ளைகள் சீரான சிந்­த­னை­யு­டனும் புத்­து­ணர்ச்­சி­யு­டனும் பாட­சா­லைக்கு செல்­வார்கள் என்­பது அங்கு நிலவும் நம்­பிக்­கை­யாகும். 

உலகின் பல நாடு­க­ளுக்கு ஜப்­பா­னிய நேர­சூசி பொருந்­தாமல் இருப்­பது இயல்­பா­ன­துதான் ஏனென்றால் சில நாடு­களில் பாட­சாலைத் தவணை கோடை­கால முடி­விலோ அல்­லது இலை­யு­திர்­கா­லத்தின் ஆரம்­பத்­திலோ தொடங்­கப்­ப­டு­கின்­றன. எவ்­வா­றெ­னினும் முடி­யு­மான அளவில் ஜப்­பா­னிய முறையைப் பின்­பற்ற முயற்­சிப்­பது பொருத்­த­மா­ன­தாகும்.
3. பாட­சா­லையின் துப்­ப­ரவு பணிகள் அனைத்­தையும் மாண­வர்­களே செய்­கின்­றனர்.
பாட­சா­லையின் துப்­ப­ரவுப் பணி­களில் அனைத்து மாண­வர்­களும் பங்­கேற்க வேண்டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இதன் நோக்கம் இயற்­கை­யான வேலை ஒழுக்கம் தொடர்பில் மாண­வர்­களின் மனதில் பதிய வைத்­த­லாகும். 

அவர்கள் தம்மை குழுக்­க­ளாக வடி­வ­மைத்துக் கொண்டு குறித்த வேலை­யினை சிறப்­பாக செய்து முடிப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு மற்றும் முயற்­சி­க­ளி­னூ­டாக என்­னென்ன வழி­மு­றை­களைக் கையாண்டோம் என்­பதை தமது மனதில் பதிவு செய்து கொள்­கி­றார்கள். அவர்கள் வகுப்­ப­றை­களை மாத்­திரம் துப்­ப­ரவு செய்­வ­தில்லை, சிற்­றுண்­டிச்­சாலை மற்றும் கழி­வ­றை­க­ளைக்­கூட துப்­ப­ரவு செய்­கின்­றார்கள். 

இறு­தி­யாக மாண­வர்கள் பாட­சா­லையில் அங்­கு­மிங்கும் கழி­வு­களை போடு­வதைத் தவிர்த்­துக்­கொள்­வதில் மிகக் கவ­ன­மாக இருப்­ப­தோடு தூய்­மையை விரும்­பு­ப­வர்­க­ளா­கவும் மாறு­கின்­றனர். சிறு­வ­யதில் எமக்கு இவ்­வாறு துப்­ப­ரவு செய்­யு­மாறு கூறி­யி­ருந்தால் நாம் கோபப்­பட்­டுத்தான் இருப்போம். ஆனால் இப்­போது, எம்­மையும் அவ்­வா­றான பணி­களில் ஈடு­ப­டுத்­தாது விட்­டு­விட்­டார்­களே என்று எம்மில் பலர் நிச்­ச­ய­மாக நினைப்போம் என்­பது மாத்­திரம் உண்மை. 
4. வகுப்­ப­றை­யி­லேயே உணவு உட்­கொள்ளல்
ஜப்­பா­னி­யர்­களைப் பொறுத்­த­வரை உணவு உட்­கொள்­ளுதல் என்­பது முக்­கி­ய­மான சமூக செயற்­பா­டாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. மாண­வர்கள் அனை­வரும் ஒன்­றாக அமர்ந்து சிறந்த முறையில் தயா­ரிக்­கப்­பட்ட சம போஷ­ணை­யுள்ள ஒரே வகை­யான உண­வினை ஆசி­ரி­யர்­களின் மேற்­பார்­வையின் கீழ் உட்­கொள்­கின்­றனர்.

 இந்த செயற்­பாடு மாண­வர்­க­ளுக்­கி­டையே நல்ல பிணைப்­பி­னையும் மேசையில் அமர்ந்து சாப்­பிடும் ஒழுக்­கத்­தினை கற்­றுக்­கொள்­ளவும் வழி­வ­குக்­கின்­றது. உணவு உண்­ப­தற்கு முன்­ப­தாக அனை­வரும் நன்றி சொல்லி (அடா­டாக்­கி­மசு) ஆரம்­பித்து நன்றி சொல்லி (கொஷீ­சோ­சமா டெஷிடா) முடித்துக் கொள்­கின்­றனர்.

அவர்கள் சாப்­பிடும் உண­வுக்­காக பூமிக்கும், அந்த உண­வுக்கும், அதனை சமைத்­த­வ­ருக்கும், அவர்கள் அமர்ந்து உண­வ­ருந்தும் மேசையில் தங்­க­ளோடு இருக்கும் சமூகத் தலை­வர்­க­ளுக்கும் மிகப் பணி­வான நன்­றியைச் சொல்லும் முறையே அடா­டாக்­கி­மசு, கொஷீ­சோ­சமா டெஷிடா ஆகிய இரு சொற்­றொ­டர்­க­ளு­மாகும்.
5. அனைத்து உயர்­நிலைப் பாட­சாலை மாண­வர்­களும் புறக்­கி­ருத்­திய செயற்­பா­டு­களில் மகிழ்­வுடன் ஈடு­ப­டுதல்
ஜப்­பா­னிய சிறு­வர்கள் வேலை­களில் ஈடு­ப­டு­வ­தில்லை, அவர்­க­ளு­டைய வேலையே விளை­யா­டு­வ­துதான். எனவே, பாட­சாலை நேரம் எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னதோ அதே­போன்­றுதான் பாட­சாலை முடிந்த பின்னர் இருக்கும் நேரமும் அவர்­க­ளுக்கு முக்­கி­ய­மா­னது. 

அவர்­க­ளது பிந்­திய நேரத்தில் கணிதம், விஞ்­ஞானம், மற்றும் ஆங்­கிலம் ஆகிய பாடங்­களில் அதிக புள்­ளி­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருக்கும் 'ஜுகு' தனியார் பாட­சா­லை­க­ளுக்கோ அல்­லது பாட­சா­லை­யி­லுள்ள விளை­யாட்டு மற்றும் இசைக் கழ­கங்­க­ளுக்கோ செல்வர்.  

ஒவ்­வொரு கனிஷ்ட உயர்­நிலைப் பாட­சாலை மாண­வனும், மாண­வியும் நீச்சல், மேசைப் பந்து, பேஸ் போல், பேண்ட் வாத்­தியம், செஸ் போன்ற ஏதேனும் ஒன்­றினைத் தெரிவு செய்­கின்­றனர். பின்னர் பிற்­பட்ட தமது பாட­சாலைக் காலங்­களில் அந்தக் கழ­கத்தில் தமது ஆற்­றலை மென் மேலும் வளர்த்துக் கொள்­கின்­றனர்.

தத்­த­மது குழுக்கள் மூல­மா­கவே அவர்கள் சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். பெரும்­பாலும் அவர்கள் தமது அதி­க­மான வார இறுதி நாட்­களை ஒன்­றா­கவே கழிக்­கின்­றனர்.
6. சிறு­வர்­க­ளுக்கு அழ­கான கவி­தை­களும் எழுத்­த­ணியும் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன
ஜப்­பா­னி­யர்கள் ஒரு­போதும் தமது பாரம்­ப­ரிய கலை வடி­வங்­களை மறந்து விடு­வ­தில்லை. எனவே கன்ஜி (இரண்­டா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட சீன எழுத்­து­ருக்கள்), ஹிர­கனா மற்றும் கட்ட கனா (இரண்டு சுதேச எழுத்து முறை­மைகள்) ஆகி­யன அனைத்து மாண­வர்­க­ளுக்கும் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. 

ஒவ்­வொரு எழுத்­துக்­க­ளையும் எவ்­வாறு எழுத வேண்டும், சரி­யான திசை­யிலும் ஒழுங்­கிலும் கோடு­களை எவ்­வாறு கீற வேண்டும் என்­பதை அனைத்து மாண­வர்­களும் கற்­றுக்­கொள்ள வேண்டும். மாண­வர்கள் இந்தச் செயற்­பா­டு­க­ளுக்கு மூக்கில் குச்­சி­க­ளையும், மெல்­லிய கட­தா­சி­க­ளையும் பயன்­ப­டுத்­து­கின்­றனர் செழிப்­பான இலக்­கிய தொன்­மை­வாய்ந்த ஜப்­பா­னிய ஹைக்கூ கவி­தைகள் மாண­வர்­களால் வாய்­மொ­ழி­யாகக் கூறப்­பட்டு மனப்­பாடம் செய்­து­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இதன் மூலம் ஒவ்­வொரு மாண­வனும் தமது கலாச்­சாரப் பூர்­வீ­கத்தை பாது­காக்க வேண்­டி­யதன் முக்­கி­யத்­து­வத்தைப் புரிந்­து­கொள்­கின்றான்.
 
7. பாட­சா­லை­யிலும் பாட­சா­லைக்கு வெளி­யேயும் சீரு­டைகள் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளன.
கனிஷ்ட உயர்­நிலைப் பாட­சாலை தொடக்கம் பாட­சாலை சீருடை அணிய வேண்­டி­யது கட்­ட­டா­ய­மாகும். அனைத்து மாண­வர்­களும் ஒரே வித­மான ஆடை­யினை அணி­வதால் சமூக ரீதி­யான அனைத்து தடை­களும் களை­யப்­பட்டு, பாட­சாலைக் கட்­ட­மைப்பின் ஒரு பகு­தி­யாக அவர்கள் ஒவ்­வொ­ரு­வரும் மாறி­வி­டு­கின்­றனர். 

அதே­போன்று சிகை அலங்­கா­ரமும் ஒரே மாதி­ரி­யா­ன­வை­யாகக் காணப்­படும். மாண­வர்கள் தமது முடி­யினை கட்­டை­யாக வெட்­டி­யி­ருக்க வேண்டும், அதே­வேளை மாண­விகள் தமது கூந்­தலை நடுத்­தர அள­விற்கு வைத்து ஓரங்­களை வெட்­டி­விட வேண்டும். வெளி இடங்­களில் மக்­களால் மாண­வர்கள் அச்­சு­றுத்­தப்­ப­டு­வ­தில்லை. மதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

அதன்­மூலம் தலை­மு­றை­க­ளுக்­கி­டையே நல்­லெண்ணம் உரு­வா­கின்­றது.
8. பாட­சா­லை­க­ளுக்கு செல்­லாது விடுதல் 0.01 வீத­மாகும்
ஜப்­பானில் பாட­சா­லைக்கு மாண­வர்கள் சமுக­ம­ளிக்­கா­தி­ருத்தல் என்­பது மிகவும் அரி­தாக நடை­பெறும் சம்­ப­வ­மாகும். ஒரு வகுப்பை எடுத்துக் கொண்டால், அனைத்து மாண­வர்­களும் சமு­க­ம­ளித்­தி­ருப்­பது மட்­டு­மல்ல, வகுப்பில் ஆசி­ரியர் கற்­பிப்­பதை மிகவும் உன்­னிப்­பாகக் கவ­னித்­துக்­கொண்­டி­ருப்­பார்கள். 91 வீத­மானோர் ஆசி­ரியர் கற்­பிப்­பதை முழு­மை­யாகக் கவ­னிப்­ப­தாக கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.
9. அனைத்­தையும் தீர்­மா­னிக்கும் ஒரு பரீட்சை
ஜப்­பானில் உயர்­நிலைப் பாட­சா­லைகள் மிகவும் இறுக்­க­மான கட்­டுப்­பா­டு­களைக் கொண்­டவை. ஜப்­பானில் உயர்­நிலைக் கல்­வியைப் பூர்த்தி செய்­பவர் இத்­தா­லியில் பட்­டப்­ப­டிப்பை பூர்த்தி செய்­த­வ­ருக்கு சம­னான தகை­மை­யு­டை­ய­வ­ராகக் கரு­தப்­ப­டுவார். எனவே கல்­லூரிப் படிப்பைத் தொட­ர­வுள்­ள­வர்­க­ளுக்கு போட்டி கடு­மை­யா­ன­தாக இருக்கும். 

ஒரு பரீட்சை அனைத்­தையும் தீர்­மா­னிக்­கி­றது. பரீட்­சையில் போது­மான தராதரத்தினைப் பெற்றால் மேற்கொண்டு கல்லூரிப் படிப்பைத் தொடர முடியும். சித்தி எய்தத் தவறும் பட்சத்தில் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடியாது, ஆனால் ஜப்பானிய தொழிற் சந்தையில் பொருத்தமான தொழிலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
10. பாடசாலை மற்றும் கல்லூரிப் படிப்பின் பின்னர் ஒரு விடுமுறை
தேசிய பாடசாலை முறைமையில் கடினமான உழைப்பு தேவைப்படுகின்றது. அதில் வெற்றி பெறுவதென்பது அவர்களது வாழ்க்கையில் பெரிய வெற்றியாகக் காணப்படுகின்றது.

கல்லூரிக் காலம் முடிவடைந்ததன் பின்னர் அதிகமானோர் எண்ணிக்கொள்வது என்னவென்றால், நாம் மிகவும் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும் என்பதை விட, நாட்களை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு சந்தர்ப்பமொன்று வழங்கப்பட்டுள்ளது என்பதாகும்.
 
பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் பெரும்பாலும் விரிவுரை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தூங்கிவழிவதைக் காணலாம். அதனால் தான் ஜப்பானிய பல்கலைக்கழகங்கள் சர்வதேச மட்டத்தில் உயர் தரத்தினை அடையவில்லை.

இதற்குக் காரணம் பாடசாலைக் காலங்களில் அவர்களது பதின்ம வயதின் ஆரம்பத்தில் கடினமாக உழைத்ததனாலாகும்.
 எம்.ஐ.அப்துல் நஸார் -

Post a Comment