Ads (728x90)

Image result for china students with classசீனாவில் உள்ள பெய்ஜிங் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், தங்களுக்கு பதிலாக வகுப்புகளைக் கவனிப்பதற்கு வாடகைக்கு ஆட்களை நியமிக்கிறார்கள்.
வாரத்துக்கு 5 வகுப்புகள், 2 வாரங்கள், ஒரு மாதம், 6 மாதங்கள் என்று தங்களுக்குப் பதில் வேறு ஆட்களை வாடகைக்கு நியமித்து, வகுப்புகளைக் கவனிக்க வைக்கிறார்கள். வாடகைக்கு வரும் நபர்களுக்கு, மாணவர்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கிறது.
தங்களுக்கு பதிலாக வகுப்புக்கு அனுப்பப்படும் வாடகை நபர்களுக்கு, அவர்களின் புகைப்படம் ஒட்டி, போலி அடையாள அட்டைகளையும் வழங்கி விடுகிறார்கள்.
ஆங்கிலம், சீனம், தத்துவம் போன்ற வகுப்புகளுக்குத் தான், அதிக அளவில் வாடகை ஆட்கள் அமர்த்தப்படுகிறார்கள். இவ்வாறு வாடகைக்கு வருபவர்கள், மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.
இணையதளங்களில் 700 குழுக்கள் மாணவர்களுக்குப் பதிலாக வகுப்புகளைக் கவனிக்கும் பணிகளைச் செய்து வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் 200 முதல் 300 பேர் இருக்கிறார்கள். நிறைய மாணவர்கள் வகுப்பில் இருப்பதால், வாடகைக்கு வந்து அமர்பவர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாக அந்நாட்டு பேராசிரியர்கள் கூறுகிறார்கள்.
1474616733-5479
Image result for china students with class

Post a Comment