Ads (728x90)

Image result for சிரியப் போர்சிரியாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஆயுத மோதல், 2011ஆம் ஆண்டு முதல்ஆரம்பித்து இடம்பெறுகின்ற போதிலும், இன்றைக்குச் சரியாக ஓராண்டுக்கு முன்னரே, அது மாபெரும் போராக, இன்னும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியது. அரேபிய வசந்தத்தின் விளைவாக, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள், 2011ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பித்தன. பின்னர் அவ்வாண்டு ஜூலையில், ஆயுதப் போராக மாறியது. அதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல பகுதிகளிலும், பல ஆயுதக்குழுக்களும் போரில் ஈடுபடத் தொடங்கின. 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி, அமெரிக்காவின் முதலாவது விமானத் தாக்குதல் இடம்பெற்றது. ஆனால், கடந்தாண்டு செப்டெம்பர் 30ஆம் திகதியே, ரஷ்ய விமானப் படையால், சிரிய எல்லைக்குள் முதன்முறையாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவே, இப்பிரச்சினையே மேலும் தீவிரப்படுத்தியதாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவின் நேரடியான பங்குபற்றல் காரணமாக, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட் பலம்பெற்றதோடு, அதன் காரணமாக, பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்திருந்தன. அண்மைக்காலத்தில், நிவாரணப் பணியாளர்கள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில், அலெப்போவில் காணப்பட்ட இரண்டு வைத்தியசாலைகள் தரைமட்டமாகின. இந்தத் தாக்குதலை, ரஷ்ய அல்லது சிரிய விமானங்களே நடத்தியதாக அறிவிக்கப்படுகிறது. - See more at: http://www.tamilmirror.lk/182875#sthash.Z07q8eSm.dpuf

Post a Comment