அந்த விளம்பரப் படத்தில் சீனாவை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது வாஷிங் மெஷினில் அழுக்கு துணிகளை போடுகிறார். அப்போது, பக்கத்து அறையில் இருந்து வெளியேவரும் ஒரு கருப்பின வாலிபர் அந்தப் பெண்ணைப் பார்த்து குறும்புத்தனத்துடன் கண்ணடிக்கிறார்.
அவரை அருகில் அழைக்கும் அந்த இளம்பெண், அவரது முகத்தின் அருகே தனது முகத்தை வைத்து காதல்வயப்படுவதுபோல் நடிக்கிறார். பின்னர், அந்த வாலிபரின் வாயை திறக்கவைத்து, வாயினுள் சலவை பவுடரை திணிக்கிறார். சலவை பவுடரை விழுங்கிய வாலிபரை தலைகீழாக வாஷிங் மெஷினுக்குள் திணிக்கிறார்.
சிலநிமிடங்களில், சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த் திடீரென ‘வெள்ளைத்தமிழனாக’ வருவதுபோல், அந்த கருப்பின வாலிபர் வெள்ளை நிறம்கொண்ட ஆசிய வாலிபராக மாறி வாஷிங் மெஷினில் இருந்து வெளியே வருகிறார்.
அவரது தோற்றத்தை கண்ட அந்த சீனப்பெண் திகைத்துப் போகிறார். இப்படியொரு காட்சி அமைப்புடன் வெளியான அந்த வீடியோ, சமீபகாலமாக சமூகவலைத்தளங்களின் வாயிலாக பலகோடி மக்களின் கண்களையும், கருத்தையும் கவர்ந்து வருகிறது.
அந்த விளம்பரம் கற்பனையின் உச்சமாக தோன்றும் அதேவேளையில், இனம் மற்றும் நிறவெறியை நினைவுப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளதாக கண்டனக்குரல்கள் கிளம்பி வருகின்றன. இதையடுத்து, அந்த விளம்பரப் படத்தை நீக்கியதுடன், அதில் காணப்பட்ட காட்சிகளின் மூலமாக யாராவது மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ‘கியாவ்பி’ சலவை பவுடர் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எனினும், யூடியூப் உள்ளிட்ட சில இணையதளங்களில் அந்த சர்ச்சை வீடியோ இன்னும் காணக்கிடைக்கிறது.
அந்த வீடியோவைக் காண…
Post a Comment