
ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். திடீரென ஒரு குரல் ‘அங்கேயே நில், இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு செங்கல் உன் தலையில் விழும்’
அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு பெரிய செங்கல் அவனுக்கு முன்னால் விழுந்து அவனை நடு நடுங்க வைத்தது. இன்னும் சற்று தூரம் நடந்த்கான். மீண்டும் அதே குரல்,
‘அங்கேயே நில். இல்லையேல் பிரேக் பிடிக்காமல் வரும் ஒரு கார் உன்னை மோதி நீ சமாதியாவாய்’. அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு கார் படு வேகமாக அவனைக் கடந்து போனது. அவன் வெலவெலத்தான்.
‘நீ யார்....’ பயந்த அவன் கேட்டான். ‘நான் உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பப்பட்டவன்’ குரல் சொன்னது.
எரிச்சலடைந்த மனிதன் கேட்டான்... ‘இப்போ எல்லாம் ஓடி ஓடி வந்து காப்பாத்துறியே.. நான் கல்யாணம் கட்டிக்கிட்டப்போ எங்கே போய் தொலைஞ்சே என்று....’
Post a Comment