Ads (728x90)



எகிப்து கடற்பகுதியில் குடியேறிகள் படகு மூழ்கியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 600 பேரை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் இந்த படகில் இருந்து 150 பேர் வரை மீட்கப்பட்டதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கப்ர் அல் ஷெய்க் கடற்கரைக்கு அப்பால் கடந்த புதனன்று படகு மூழ்கியுள்ளது.
எகிப்தில் இருந்து ஐரோப்பாவை நோக்கிவரும் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய எல்லை நிறுவனம் எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்போது 42 சடலங்கள் மீட்கப்பட்டதை எகிப்து சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. எகிப்து, சிரியா மற்றும் ஆபிரிக்க குடியேறிகள் படகில் இருந்துள்ளனர். அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றிச் சென்றதாலேயே படகு மூழ்கி இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காலநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் வட ஆபிரிக்க கடற்கரையில் இருந்து இத்தாலியை நோக்கி பயணிக்கும் தஞ்சம்கோரும் படகுகளின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துள்ளது. 

Post a Comment