மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி கொலையில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காதலித்து விட்டு ஏமாற்றியதால் கொன்றதாக காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 20ம் திகதி மயிலாடுதுறை அடுத்த ஆக்கூர் அப்பராஜபுர பகுதியில், பூம்புகாரில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் தீபா மர்மமான முறையில் வாய்க்காலில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்நிலையில், கடைசியாக தீபிகாவிற்கு வந்த அழைப்பை வைத்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் 2 பேர் சிக்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த அரசன் (வயது-21) பொலிசில் சரண் அடைந்துள்ளார். சம்பவம் குறித்து அரசன் அளித்துள்ள வாக்குமூலத்தில்: அண்ணாமலை பல்கலையில், எம்.பி.ஏ.படித்து வரும் நான், இதற்கு முன்பாக பூம்புகார் கல்லூரியில் தீபிகாவுடன் படித்தேன். அப்போதே அவருடன் காதல் ஏற்பட்டது. இந்நிலையில், தீபிகாவுக்கும், மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. என்னை காதலித்தவள் இன்னொருவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று அவளை கொலை செய்ய திட்டமிட்டேன். இதன் காரணமாக ராஜமோகன் என்ற நண்பனை அழைத்துக்கொண்டு அப்பராஜபுரம் சென்றேன். அப்போது தீபிகாவுக்கு போன் செய்து உனக்கு கிப்ட் வாங்கி வந்திருக்கிறேன். இப்போவே கொடுக்க வேண்டும். வாய்க்கால் அருகே வா என்று கூறினேன். பின்னர், தயங்கியபடி வந்த தீபிகாவை அருகில் இருந்த கட்டையால் தலையில் ஓங்கி அடித்தேன். இதில் மயங்கி விழுந்து விட்டாள். உடனே நான் அங்கிருந்து ஓடி விட்டேன் அதன் பிறகு பொலிசில் சரண் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.
கல்லூரி மாணவியை கொன்றது ஏன்? காதலன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்!

Post a Comment