அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனுக்கும் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே நடந்த முதல் தொலைக்காட்சி விவாதத்தில் இருவரும் கடுமையான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.
பொருளாதாரம், வரி விதிப்பு, இன உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்கள் குறித்து 90 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.
ஹிலரி கிளிண்டன் அரசாங்கத்தில் பதவி வகித்த போது, நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்ததாக ட்ரம்ப் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்கத் தேவையான பலம் ஹிலரிக்கு இல்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் அவருடையே கனவுலகிலேயே வாழ்கிறார் என்றும் அவருடைய வருமான வரி கணக்கு விடயத்தை வெளியிடாமல் மறைக்கிறார் என்றும் ஹிலரி குற்றம் சாட்டினார்.
ஆனால், ஹிலரி கிளிண்டன் வெளியுறவுச் செயலராக இருந்த காலத்தில் அனுப்பிய 30,000 ற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை வெளியிட்ட உடன், தான் தனது வருமான வரி கணக்குகளை வெளியிடுவதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இந்த தொலைக்காட்சி விவாதத்தை 10 கோடி பேருக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கக்கூடும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
Post a Comment