எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https://www.facebook.com/ijsfastnews )வெவ்வேறு காலகட்டத்தில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு அந்தந்தக் காலத்திற்கேற்ப அதிசயங்களையும் அத்தாட்சிகளையும் இறைவன் தந்தருளினான்.
கவிதைகள் பிரபலமாக இருந்த அரேபிய மண்ணில் திருக்குர்ஆனின் இறைவசனங்களை அத்தாட்சியாக நபி முஹம்மது (ஸல்) மக்களுக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால் இறைமறுப்பாளர்களோ, ‘அது கலப்படமான கனவுகள் என்றும், அது அவருடைய சொந்த கற்பனை என்றும், இவர் ஒரு கவிஞர்தாம் என்றும், இதை முஹம்மதுக்கு ஒரு நபர்தான் கற்றுத் தருகிறார்.
இது இறை வசனங்கள் அல்ல என்றும், இட்டுக்கட்டிய கதையே தவிர வேறில்லை என்றும், இது பொய்யேயன்றி வேறில்லை’ என்றும் அவதூறு கூறினர். அதோடு குர்ஆனை முஹம்மது நபி (ஸல்) மற்றவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போதெல்லாம் நிராகரிப்பவர்கள் கூச்சல் குழப்பம் உண்டு செய்து கேட்கவிடாமல் தடுத்தனர்.
வெளியூரிலிருந்து மதுவும் மாதுவும் வரவழைத்து மக்களை வழிகெடுத்தனர். பல வகைகளில் முஹம்மது (ஸல்) அவர்களின் முயற்சியை முறியடிக்க நினைத்தும் நிராகரிப்பாளர்களின் சதித் திட்டங்கள் தோற்றன. இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது, ஆகையால் நிராகரிப்பாளர்கள் தமது வீட்டில் எவராவது ஒருவர் இஸ்லாமிற்கு மாறினார் என்றால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். தமக்குக் கீழ் வேலை பார்ப்பவர் இஸ்லாமிற்குத் திரும்பியிருந்தால் அவர்களைச் சித்தரவதை செய்தனர். பண பலமுடையவர் இஸ்லாமிற்கு மாறியிருந்தால் அவர்களை மிரட்டிப் பணிய வைக்கப் பார்த்தனர்.
இஸ்லாமைத் தழுவிய யாஸிர் குடும்பத்தினரை அபூஜஹ்ல் கொடுமைப்படுத்தி முதலில் யாஸிரையும், அதன்பின் அவர் மனைவி சுமைய்யா பின்த் கய்யாத் (ரலி) அவர்களையும் கொலை செய்தான். சுமைய்யாதான் இஸ்லாத்திற்காக உயிர்த்தியாகம் செய்த முதல் பெண்மணி.
எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https://www.facebook.com/ijsfastnews )அதன்பின் யாஸிரின் மகன் அம்மாரை கொடுமைப்படுத்தினான் அபூ ஜஹ்ல். நபி முஹம்மது (ஸல்) அவர்களைத் தூற்றச் சொன்னான், அபூ ஜஹ்ல் வணங்கி வந்த லாத், உஜ்ஜா என்ற சிலைகளைப் புகழச் சொல்லி வற்புறுத்தினான், சொல்லவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக அம்மாரை மிரட்டினான் அபூ ஜஹ்ல். தனது பெற்றோர் தன் கண் முன் சாகடிக்கப்பட்டதைப் பார்த்த அம்மார் மிரட்டலுக்குப் பயந்து அடிபணிந்தார்.
பின்பு நபிகளாரிடம் சென்று மன்னிப்பும் கேட்டார். அதற்கு நபி முஹம்மது (ஸல்) “நம்பிக்கை கொண்ட பின் அல்லாஹ்வை நிராகரித்தால் அல்லாஹ்வின் கோபம் ஏற்படும். ஆனால் உங்களது உள்ளம் நம்பிக்கை கொண்டு, நிர்ப்பந்தத்தினால் வெறும் வார்த்தையில் நிராகரித்தால் குற்றமில்லை” என்ற இறைவசனத்தை ஓதிக் காட்டி விளக்கினார்கள். அதன்பின் அம்மாரின் மனம் சாந்தியடைந்தது.
இஸ்லாத்தினை ஏற்றதால் கொடுமைக்கு உள்ளான அடிமை வேலைப் பணியாட்களை அபூ பக்ர் (ரலி) விலைக்கு வாங்கி விடுவித்தார்கள்.
பலதரப்பட்டவர்கள் பலவிதமான வேதனைக்குள்ளாக்கப்பட்டாலும் அவர்களது இறைநம்பிக்கையும், மன உறுதியும் அதிகரிக்கவே செய்தது.
குர்ஆன் வசனங்கள் 21:5, 16:103, 25:4-5, 41:26, 31:6, 16:106

ஜப்பானில் அதிகரித்து வரும் இறை இல்லங்கள்.!
உலெகெங்கும் இஸ்லாத்தின் வளர்சி அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது இஸ்லாத்தின் தாக்கம் ஜப்பானையும் வி...
READ MORE'பெண்களுக்கு அநீதியிழைக்கும் தலாக்முறை, முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்' - மோடி அரசு
அனைத்து தரப்பினரிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தாமல், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட மாட்டாது' என்று மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை ...
READ MOREஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..?
அல்லாஹ்வின் திருப்பெயரால்... ஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..? இந்த ஹதீஸின் மூலம் நாம் அறிவது.. அமானிதம், மற்றும்...
READ MOREசோதிக்கப்பட்ட மூவர் நபி அவர்களின் வரலாற்றிலிருந்து
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: பனூ இஸ்ராயீல் கூட்டத்தாரில் ஒரு வெண்தோல் நோயுடையவ...
READ MOREசவுதி அரபிய மன்னர் அப்துல்லாஹ் (சமீபத்தில் வபாத்தான) அவர்களிடம் ஓரு புகார் செய்யப்பட்டதாம்..அதிகம் .பகிருங்கள்
"முஸ்லீமல்லாத பிற மதத்துக்காரர்கள் தொழுகை நேரத்தில் தெருக்களில் நின்று கொண்டு இடஞ்சல் தருகிறார்கள். இதற்கு தங்களின் ஆலோசனைப்படி புதிய ச...
READ MORE
பயங்கரவாதிகளில் 94% பேர் முஸ்லிம் அல்லாதவர்களே ! அமெரிக்க உளவு துறை (FBI) வெளியிட்ட அறிக்கையில் பகீர் தகவல்
பயங்கரவாதம் கடும் அச்சுறுத்தலாக உள்ளது என்பது உண்மையே, ஆனால் முஸ்லிம்களினால் அச்சுருத்தல் உள்ளது என்பது மிகைபடுத்தப்பட்ட செய்திதியாகும்...
READ MORE
உலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் ?
இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய ...
READ MOREஇலங்கை முஸ்லிம்களுக்கு ஆச்சரியத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்திய இலங்கை அரசின் தீர்மானம். i
ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோவினால், ஜெருசலத்தின் அல்-அக்ஸா புனித பூமியில் முஸ்லிம்களுக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தி, அங்கு ய...
READ MORE
பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் சொத்து , யூதர்களுக்கு எந்தத் தொடர்பம் இல்லை - யுனஸ்கோ பிரகடனம்
முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான பைத்துல் முகத்தஸ் திரு தலமும் அதன் அருகில் இருக்கும் குப்பத்த...
READ MORE
பாவமன்னிப்புத்தேட தலையாய துஆ (ஸய்யிதுல் இஸ்திக்ஃபார்)
اَللّهُمَّ أَنْتَ رَبِّيْ ، لاَ إِلهَ إِلاَّ أّنْتَ ، خَلَقْتَنِيْ ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا ...
READ MORE
யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? படித்து பாருங்கள் சுவாரசியமாக இருக்கும்!
தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக...
READ MORE
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்...
READ MORE

Post a Comment