எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https://www.facebook.com/ijsfastnews )துபாய் மன்னர் சேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் போல பேசி மிமிக்ரி செய்து அசத்திய குழந்தையை பார்க்க மன்னர் அவள் வீட்டுக்கே தேடிப்போய் அவளை தூக்கி வைத்து கொஞ்சி அவள் குடும்பத்தார் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார்.
துபாயை சேர்ந்த மஹ்ரா அல் ஸ்கேஹி என்ற ஆறு வயது சிறுமி சமீபத்தில் துபாய் மன்னர் பேசிய ஒரு பேச்சை அப்படியே தனது மழலை மொழியில் மிமிக்ரி செய்ய அது வைரலாக பரவி மன்னரின் பார்வைக்கும் போயிருக்கிறது.
மன்னர் அந்த வீடியோவை ட்வீட் செய்து இந்தப் பாப்பாவை நான் சந்திக்க விரும்புகிறேன், இவளைப் பற்றி தெரிந்தவர்கள் தகவல் கொடுங்கள் என்று சொல்ல. மஹ்ராவை தெரிந்த பலரும் அவருக்கு அவளது முகவரியை அனுப்பியிருக்கிறார்கள்.

மன்னர் நேரிலேயே மஹ்ராவின் வீட்டுக்குப் போய் அவளை தூக்கிவைத்து ஆசைதீர கொஞ்சிவிட்டு திரும்பியிருக்கிறார்.
மன்னரை சந்தித்த இன்ப அதிர்ச்சியிலிருந்து மஹ்ராவின் குட்ம்பத்தா இன்னும் மீளவேயில்லை.
நடந்ததெல்லாம் கனவு போல இருக்கிறது, மேன்மை தங்கிய மன்னர் அந்த வீடியோவை பார்ப்பார் என்றுகூட நாங்கள் நினைத்துப்பார்க்கவில்லை.
மன்னர் தன்னை சந்திக்க வருவதையறிந்த மஹ்ரா மிகுந்த உற்சாகமடைந்ததாக அவளது தாயார் கூறியிருக்கிறார்.
மஹ்ராவுக்கு கல்லீரலில் உள்ள பிரச்சனை அவளது உடல் வளர்ச்சியை குறைத்து இருக்கிறது, ஆனால் படிப்பில் அவள் படுசுட்டியாம்.
அவளுக்கு ஒரு அண்ணனும் ஒரு அக்காவும் இருக்கிறார்கள்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https://www.facebook.com/ijsfastnews )
எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https://www.facebook.com/ijsfastnews )Showing posts with label All. Show all posts

ஜெயலலிதா எப்போது சிகிச்சை முடியும்?
எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https:/...
READ MORE
இன்று முதல் வற் (வரி) அமுல்!
எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https:/...
READ MORE
புளூட்டோவில் இருந்து பூமிக்கு 15 மாதம் கழித்து வந்த தகவல்!
எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https:/...
READ MORE
50 வீதத்தினால் உயரும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள்!
எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் ( https...
READ MORE
Post a Comment