Ads (728x90)

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருநங்கை ஒருவர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து இறந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
இன்று காலை மது அருந்தி வாகனம் ஓட்டியதாக தாரா என்ற திருநங்கையை காவல்துறையினர், பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். விஷயம் தெரிந்து அவருடைய நண்பர்களான மற்ற திருநங்கைகள் அங்கு சென்று பார்த்தனர்.
ஆனால், 90% தீக்காயங்களுடன் தாரா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
காவல் நிலையத்தில் தாராவுடனான விசாரணையின்போது வாக்குவாதம் தீவிரமாகி, போலீசார் அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. இதனை கண்டித்து திருநங்கைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Post a Comment