Ads (728x90)



அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனாலட் ட்ரம்ப் வெற்றி பெற்றதும் பெற்றார், அதிலிருந்து அவருக்கு எதிராக போராட்டங்களும் வலுத்து வருகிறது.
தொடக்கத்தில் இருந்தே பல்வேறு ஊடகங்கள்,பத்திரிகைகள் ஹிலாரியின் வெற்றியையே உறுதி செய்து வந்தன. ஆனால் அவகைளை பொய்யாக்கி ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.
அன்றைய தினத்தில் இருந்தே அவருக்கு எதிராக போரட்டங்கள் தொடங்கிவிட்டன. நேற்று மூன்றாவது நாளாக போரட்டங்கள் நடந்தன.லட்சக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டு ட்ரம்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
நியூயார்க்,லாஸ் ஏஞ்சல்ஸ்,சிகாகோ போன்ற நகரங்களில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.பெண்களுக்கு எதிரானவராக, இஸ்லாமியர்களுக்கு எதிரானவராக ட்ரம்பை சித்தரித்து கோஷங்கள் எழுப்பினர்.
பல இடங்களில் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை களைத்தனர்.இன்னும் சில இடங்களில் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர்.
ஆனாலும் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் கூடியது. பேரணியில் எங்கு பார்த்தாலும் ‘ட்ரம்ப் எங்கள் அதிபர் அல்ல’ என்ற கோஷங்கள் ஒலித்தன. ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு அதிகமானால் அவருக்கு அடுத்தபடியாக உள்ளவர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள் என்ற தகவல்களும் வரத்தொடங்கியுள்ளன.

Post a Comment