Ads (728x90)



எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடையே கடந்த சில நாட்களாக துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இதனால், இந்தியா தரப்பில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட பொதுமக்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் 6 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பாகிஸ்தான் இராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அனைத்து உயிரிழப்புகளும் நாக்யால் பகுதியின் வெவ்வேறு கிராமங்களில் நிகழ்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் அத்துமீறி மீண்டும் நாக்யால், ஜன்ரோட் மற்றும் கேல் ஆகிய பகுதிகளில் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

Showing posts with label AllShow all posts

Post a Comment