ஜிம்பாப்வே – இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் களமிறங்கிய ரங்கன ஹேராத் தலைமையிலான இலங்கை அணி 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹாரேராவில் நடைபெற்றது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று ஜிம்பாப்வே அணிக்கு 412 ரன்களை இலங்கை அணி இலக்காக நிர்ணயித்திருந்தது.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் இலங்கையின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறியதால்
இந்நிலையில் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி சீரான இடைவெளியில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணி 225 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை முன்னிலையில் உள்ளது.

Post a Comment