Ads (728x90)



இந்தியா முழுவதும் நிலுவையில் இருக்கக்கூடிய வழக்குகளின் எண்ணிக்கை கோடியை தாண்டும். அந்தளவுக்கு தீர்ப்புகள் வராமல் வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில், முக்கியமான ஒன்று, நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லாதது.
lok-adalat-court-1
lok-adalat-court-1இந்நிலையில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத் நீதிமன்றங்களின் மூலம் மொத்தம் 18.7 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வபோது, லோக் அதாலத் என்ற பெயரில் சட்ட சேவைகள் ஆணையம் சார்பாக, வழக்குகளை தீர்த்து வைக்கும் முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.
இதன்படி, சனிக்கிழமை நாட்டின் முக்கிய நகரங்களில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு, லோக் அதாலத் நீதிமன்றங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மொத்தம் 18 லட்சத்து 70 ஆயிரம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன.
lok-adalat-court
lok-adalat-courtஇவற்றின் மதிப்பு ரூ.640 கோடியாகும். சொத்து வழக்குகள், இழப்பீட்டு வழக்குகள், மான நஷ்ட வழக்குகள், வாகன விபத்து வழக்குகள் என பலதரப்பட்டவை இந்த முகாம்களில் தீர்த்து வைக்கப்பட்டதாகவும், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை லோக் அதாலத் பெற்றிருப்பாகவும் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment