உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறபோகின்றது. இந்த தேர்தலில் அரசியல் அனுபவமிக்க ஹிலாரி கிளின்டன் ஜனநாயக கட்சியின் சார்பாகவும் டொனல்ட் டிர்ம்ப் குடியரசு கட்சியின் சார்பாகவும் போட்டியிடுகின்றனர்.
இருவருக்குமே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் ஹிலாரி கிளிங்டன் வெற்றியடையக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது.இருப்பினும் கடைசி நேர தேர்தல் கணிப்பு குடியரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகின்றது.
இவைகள் யாவும் யூகங்களாகவே இருக்கின்றது உண்மையான முடிவுக்காக அமெரிக்கா மக்கள் இன்று இலங்கை நேரப்படி மாலை 4 மணி முதல் வாக்களிக்கப்போகின்றார்கள். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதிபெற வேண்டுமாயின் அவர்கள்
அமெரிக்காவில் பிறந்த அந் நாட்டுக் குடிமகனாக இருக்க வேண்டும்.
35 வயது நிறைவு அடைந்திருக்க வேண்டும்.
14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும்.
தேர்தலில் 14 கோடி 63 இலட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்காக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சுமார் 4 கோடி மக்கள் யாரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற தீர்மானித்து வாக்களித்துவிட்டார்கள். மிகுதியாக சுமார் பத்தரை கோடி மக்களே இன்று தீர்மானிக்கப்போகின்றார்கள்.
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும்(68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு(70) இடையே கடுமையான போட்டி நிலவிவருகின்றது.இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் இரண்டாகும்.
இந்த இருவருமே கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
உலகையே தனது தலைமையின் கீழ் வைத்துகொண்டிருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி, அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கோ, அமைச்சரவைக்கோ கட்டுப்பட்டவர் அல்ல. எந்த விடயமானாலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர். அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் எளிதான காரியமல்ல.
தேசத்துரோகம் மற்றும் கொள்ளை போன்ற மோசமான குற்றங்களுக்காக அவர் மீது நாடாளுமன்றம் விசாரணை நடாத்தி பதவி நீக்கமுடியும். வேறு தண்டனை வழங்கி விடமுடியாது. தனது ஒரு கையெழுத்தால் ஒரு நாட்டின் தலை விதியையே மாற்றும் வலிமை படைத்த அதிகாரத்துடன் இருப்பவர்.
இந் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை அந் நாட்டுடன் உலகமே எதிர்பார்ப்பது வழமையானதே. அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது அதிபர்,பிரதி அதிபர் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுக்கும் தேர்தலாகும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறைகளை பார்த்தால் அதிபராக தேர்வு செய்யப்படுபவர் நாடு முழுவதிலும் உள்ள மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றால் மட்டும் போதாது. மாகாண ரீதியில் தேர்வாளர் குழுவின் வாக்குகளை அதிகம் பெறவேண்டும் என்பது கட்டாயமாகும்.
228 ஆண்டுகளின் பாரம்பரியத்தை கொண்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் அரசியல் சட்டப்படி மாகாண அளவிலான தேர்வாளர்குழு மூலமாகவே அதிபரும், உப அதிபரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தேர்வாளர் குழு நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் மாகாண வாரியாக மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள்தான் அதிபராகவும், உப அதிபராகவும் வர முடியும்.
அமெரிக்காவின் 50 மாகாணங்கள், மத்தியரசின் ஆட்சிக்கு உட்பட்ட தலைநகரப்பகுதியான கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றிலிருந்து 538 தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதே நடைமுறையில் உப ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படுவார்.
அமெரிக்காவின் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிங்டன் அம்மையார் அரசியல்விடயங்களில் நன்கு அனுபவத்தை கொண்டவராவர் ஆனால் குடியரசு தலைவரோ ஓர் சிறந்த முதலீட்டாராகவும் அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுனராகவும் இருக்கின்றார் அத்தோடு நிதிவளத்தின் வசதியை தன்னகத்தே கொண்டுள்ளார்.
அமெரிக்க மக்கள் தங்கள் நலனைக் கருத்தில் கொண்டவராகவே டிரம்ப் அவர்களை பார்க்கிறார்கள்.
அமெரிக்கா முற்றிலும் அமெரிக்கர்களுக்கான நாடாகவே மாற்றப்படும் என்பதுதான் அவரது பிரச்சாரத்தின் மூலதனமாக இருக்கின்றது. ஏற்கெனவே ஹெச்-ஒன் பி விசா விவகாரமும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பிற நாட்டவர்கள் தட்டிப் பறிப்பதும் அங்கு பெரும் பிரச்னையாகப் பார்க்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.இதில் மக்கள் டிரம்ப்பை நேசிக்க காரணமாக தெரிகின்றது.
டாலர் தேசம் என்று அழைக்கப்படும் அமெரிக்காதான் அனைத்து நாடுகளின் நாணயத்தின் மதிப்பை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை கொண்டுள்ளது.
அமெரிக்க டாலர்தான் உலக கரன்சிகளுக்கெல்லாம் தலைவனாக இருக்கின்றது. அந்த டாலரில் சிறு ஆட்டம் ஏற்பட்டாலும் அது உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும். டாலரின் மதிப்பு என்பது அந்நாட்டின் பல பொருளாதார காரணிகளைச் சார்ந்து இருக்கிறது.
அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களின் சதவீதம் 5 ஆக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊதிய உயர்வு கடந்த நான்கு ஆண்டுகளில் 2 சதவீதமாக மட்டுமே இருந்து வந்துள்ளது. இப்போதுதான் 2.5 சதவீதத்தை எட்டியிருக்கிறது. ஆனாலும் அமெரிக்கர்களில் 60 லட்சத்துக்கும் மேலானோர் பகுதிநேர வேலைதான் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் 7 மில்லியன் மக்கள், வறுமையில் வாழ்கிறார்கள் என்பதுடனேயே இந்த தேர்தல் நடைப்பெற போகின்றது என்பதை நினைவில்வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
காரணம் இந்த பிரச்சினையை அமெரிககாவின் மக்கள் மனநிலையில் எப்படியான தாக்கத்தை ஏற்டுத்தப்போகின்றது என்பது முக்கியம். தற்போதைய நிலையாக இது இருந்தாலும் உலக நாடுகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் ஏதோ ஒருவகையில் அமெரிக்கா வைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. இதையும் மிக முக்கியமாக கருதக்கூடியவர்களே அமெரிக்கர்கள்.
ஆசிய நாடுகளில் அனேகமானவை ஹிலரி கிளின்டன் வெற்றிபெறுவதையே விரும்புகின்றது. அந்த வழியில் ஊடக அறிக்கைகளின் படி வெற்றி வாய்ப்பு அவருக்கே இருப்பதாக தெரியவருகின்றது. இருப்பினும் டொனால் டிரம்ப அவர்கள் வியாபாரம் தந்திரம் படைத்தவராக இருப்பதால் அமெரிக்க மக்களுக்கு இறுதியாக என்ன தந்திரத்தை உபயோகிக்க இருப்பார் என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
உலக நாடுகளை தன் வசதிக்கேற்ப வசப்படுத்தும் தந்திரத்துடன் இருக்கும் அமெரிக்கா இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினையில் இந்தியாவின் விருப்பத்தையே தனது விருப்பமாக்கி செயல்படுவது மாத்திரம் உறுதியாகும் இந்நிலையில் ஈழ தமிழ் மக்களின் விடயத்தில் இந்தியாவே தமிழ் மக்களின் வாரிசாக காட்டிக்கொண்டு தமிழர்களை காட்டி இலங்கை அரசை தன் கைக்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றது.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிங்டன் வந்தாலும் டொனல் டிரம்ப் வந்தாலும் அவர்கள் இந்தியாவின் ஆலோசனைப்படியே இலங்கை சிறுபான்மை மக்களின் பிரச்சினையில் தலையிடுவார்களேயன்றி நேரடியாக உதவி செய்வார்கள் என்பது பகல் கனவாகவே இருக்கும்.
1008 தேங்காய் உடைத்த சிவாஜிலிங்கம் அவர்கள் அந்த தேங்காய்களை தேவையான நமது மக்களுக்கு கொடுத்திருக்கலாம் அதைவிட்டு அமெரிக்காவிற்கு விசா பெறுவதற்காக ஹிலாரி அம்மையாருக்கு கொடுத்த மறைமுக இலஞ்சமாகவே இதை பார்க்கின்றோம். நாளை காலை 10மணிக்கு தேர்தல் முடிவை தீர்மானிக்கப்போவது அமெரிக்கா மக்களேயாகும்.
இதில் யார் தெரிவு செய்யப்பட்டாலும் எமது மக்களின் பிரச்சினையை தீர்க்க முழு மனதுடன் முன்வரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
Post a Comment