அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் 279 இடங்களில் வெற்றி பெற்று அதிபராகியுள்ளார். டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி தோல்வியை தழுவியுள்ளார்.
இந்த தோல்வி தொடர்பாக ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளதாவது, ‘’மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தோல்வி தந்த வலி நீங்க நீண்ட நாட்கள் ஆகும். ட்ரம்ப் அதிபர் ஆவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ட்ரம்புக்கு நாட்டின் சார்பில் வாழ்த்து சொல்கிறேன். நாட்டு நலனுக்காக இணைந்து பணியாற்ற உள்ளதாக அவரிடம் தெரிவித்தேன்’’ என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

Post a Comment