Ads (728x90)



விசாகப்பட்டினம் எஸ் கோட்டா பகுதியை சேர்ந்தவர் வரலக்ஷ்மி. இவர் 38 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகைக்காக தனது கணவர் Nooka Rajuவை குடும்பத்தினர் உதவியுடன் கொலை செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மது பழக்கத்திற்கு அடிமையாகி வரலஷ்மியுடன் அடிக்கடி சண்டை போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
காப்பீட்டு முகவராக பணியாற்றி வந்த நூக்கா ராஜூ பெயரில் 38 லட்சத்திற்கு காப்பீட்டு போட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 26ம் தேதி Nooka Raju புறநகர் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வரலக்ஷ்மி நாடகமாடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதில் கணவனுக்கு மது கொடுத்து அவர் போதையில் இருந்தப்போது தனது குடும்பத்தினர் நான்கு பேருடன் சேர்ந்து புறநகர் பகுதியில் வைத்து கணவனின் தலையை பாறையில் மோதி கொன்றதாக வரலக்ஷ்மி ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைதொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீஸார் வரலக்ஷ்மி உள்பட இரண்டு பேரை கைது செய்தனர் . மேலும் தலைமறைவாகியுள்ள இரண்டு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Post a Comment