Ads (728x90)



எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

இந்த உலகத்தில் பேய் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி உலகம் முழுவதும் விவாதங்களும் ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. பேய் இருக்கிறது என்று ஆங்காங்கே புரளிகள் கிளம்பிக் கொண்டிருந்தாலும், அது பற்றிய கட்டுக் கதைகளும் வீடியோக்களும் கிளம்பிக் கொண்டிருந்தாலும், அறிவியல் பூர்வமாக அது இன்று வரை நிரூபிக்கப்படவில்லை.

நாம் என்ன தான் பேய்களை நம்பாதவர்களாக இருந்தாலும், ஒருவேளை அது இருப்பது உண்மைதானோ என்று யோசிக்கும்போதே முதுகுத் தண்டு சில்லிடுகிறதா? 'ஜகன் மோகினி', 'மை டியர் லிசா', 'யார்', 'முனி', 'காஞ்சனா', 'பிட்ஸா' உள்ளிட்ட பல பேய்த் திரைப்படங்கள் உங்களைப் பயமுறுத்தினாலும், 'ஆனந்தபுரத்து வீடு' போன்ற படங்கள் நமக்கு பாஸிட்டிவ்வான பேயை அறிமுகப்படுத்தியுள்ளன.

'சந்திரமுகி' படத்தில் பேய் இருப்பதற்கான சில அறிகுறிகளை வடிவேலுவிடம் ரஜினிகாந்த் விளக்குவார். அதுப்போன்ற அறிகுறிகளில் சிலவற்றை இப்போது நாம் பார்க்கலாம். அவற்றை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள் என்றால்... வாழ்த்துக்கள்! உங்களைப் பேய் சந்தித்திருக்கிறது!

யாரோ உங்களை அழைக்கும் குரல்

தனியாக நீங்கள் நடந்து கொண்டிருக்கும் போதோ அல்லது உங்கள் அறையில் தனியாக அமர்ந்திருக்கும் போதோ, யாரோ உங்களைக் கூப்பிடுவது போலத் தோன்றும். சுற்றும் முற்றும் பார்த்தாலும் அங்கே யாருமே இருக்க மாட்டார்கள். அது வேறு யாராக இருக்க முடியும்?

நாய் ஊளையிடும் சத்தம்!

நம் கண்களுக்குத் தெரியாத பேய்கள் சில சமயம் நாய், பூனை, குதிரை உள்ளிட்ட சில பிராணிகளுக்குத் தெரிந்து அவை பயங்கரமாகக் கத்த ஆரம்பிக்கும். உயிரே போகும் அளவுக்கு நாய் குரைக்கும்; ஊளையிடும். அந்தச் சமயத்தில் அந்த இடத்தில் பேய்(கள்) இருப்பதை நீங்கள் குறிப்பாக அறிந்து கொள்ளலாம்.

புதிய நறுமணம்!

உங்கள் வீட்டில் திடீரென்று ஒரு புதிய நறுமணம் கமழ்ந்து வீசத் தொடங்கும். அது பேய் பரப்பும் வாசனைதான்! பேய் தன் வருகையை உணர்த்திய பின், அந்த நறுமணம் காணாமல் போய்விடும்.

மினுமினுக்கும் விளக்குகள்!

நம் வீட்டில் அதுவரை 'பளிச்'சென்று எரிந்து கொண்டிருந்த விளக்குகள், நம் அழையா விருந்தாளியான பேயின் வருகையை அறிவிக்கும் பொருட்டு அணைந்து அணைந்து எரியத் தொடங்கும்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )


பேய் காற்று!

ஊர் உலகமே அமைதியாக இருக்கும் ஒரு வேளையில், ஒரு பயங்கரமான காற்று உங்களை மட்டும் தழுவிக் கொண்டு செல்லும். உங்களுடன் பேச விரும்பும் ஆவிதான் அது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தோள் பக்கம் மூச்சு விடும்!

நீங்கள் தனிமையில் அமைதியாக அமர்ந்திருக்கும் போது, உங்கள் தோள்களுக்குப் பின்னால் யாரோ பெருமூச்சு விடுவது போன்ற சத்தம் கேட்கும். அது பேய்தான்! அந்தப் பேய்க்கு உங்கள் மேல் எவ்வளவு பொறாமையோ!

நடமாடும் சத்தம்!

உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருக்கும் போது, மாடியில் 'டக்டக்'கென்று யாரோ நடந்து செல்வது போல் சத்தம் கேட்கும். அல்லது பூட்டிய கதவுக்குப் பின்னாலிருந்து கொலுசு அல்லது சலங்கை சத்தம் 'சலசல'வென்று கேட்கும். பேயுடன் ஒரு எண்டர்டெயின்மெண்ட்டுக்கு நீங்கள் தயாராக வேண்டியது தான்!


எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

Post a Comment