Ads (728x90)

நோனாகம – எம்பிலிப்பிடிய பிரதான வீதியின் ஹுங்கம – பல்லேரொட சந்திக்கு அருகில் நேற்று (11) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் வண்டியும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த நிலையில் , மோட்டார் வண்டியை செலுத்திய 22 வயது இளைஞர் மற்றும் 20 வயதுடைய யுவதி ஆகியோர் சிகிச்சைக்காக குட்டிகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணை மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிடிய மருத்துவமனையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, விபத்து தொடர்பில் டிபர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

motr

Post a Comment