Ads (728x90)



கோயம்புத்தூரில் தீதிபாளையம் அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் சரவணன் (45) மற்றும் மாரப்பன் (35) ஆகியோர் காலை 9 மணியளவில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது, சரவணன் மாரப்பனிடம் இட்லி சாப்பிட பணம் கேட்டதற்கு மாரப்பன் தர முடியாது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து சரவணன் இட்லி வாங்க மாரப்பனிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளார். ஓயாமல் பணம் கேட்டதால் மாரப்பன் ஆத்திரத்தில் சரவணனை கீழே தள்ளினார்.
அப்போது சரவணன் அருகிலிருந்த சுவற்றில் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தது. உடனடியாக சரவணனின் உறவினர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Post a Comment