இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 488 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் எடுத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து,317 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறவே 488 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 49 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்திய அணி 488 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்ததால், இதனை 500 ரூபாய்தடையுடன் சேர்த்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்
Post a Comment