
இஸ்ரேலில் கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவி வரும் கொடிய தீ அனர்த்த நிலையில், அவர்களின் அடக்குமுறைகளுக்கு உள்ளான பலஸ்தீனர்கள் மனிதாபிமானத்தின் எல்லையை உலகுக்கு உணர்த்தும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

பலஸ்தீன மக்கள் வரலாற்றின் நெடுகிலும் மனிதாபிமானம் மிக்கவர்கள். ரோமானியப் பேரரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி விரட்டியடிக்கப்பட்ட அடாவடி யூதர்களை கானானில் இருந்து பலஸ்தீனம் வரை குடியமர உதவி செய்தது முதல் வரலாற்றின் பதிவுகளில் பலஸ்தீனர்களின் துயர அத்தியாயங்கள் எழுதப்படத் தொடங்கியது. -
.

இன்றைக்கும் பலஸ்தீனர்களின் நிலங்களை அடாவடியாக அபகரித்துக் கொண்டும், பலஸ்தீன பிஞ்சுகளை அநியாயமாக கொன்றொழித்துக் கொண்டும் இருக்கும் இஸ்ரேல் எனும் ஓநாய், அமெரிக்காவின் வளர்ப்பு நாய் என்பதால் அந்நாட்டுக்கு எதிரான எந்தவொரு சர்வதேச சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதன் காரணமாக அவர்களின் வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
பச்சிளம் பாலகர்கள் உள்ளிட்ட பல்லாயிரம் உயிர்கள் கொன்றொழிக்கப்படக் காரணமாக இருந்த, தமது வீடுகளை அடாவடியாக இடித்துத் தள்ளி ஆக்கிரமித்த இஸ்ரேலியர்கள் இயற்கையின் தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் இந்நிலையில் மீண்டும் பலஸ்தீனம் தன் மனிதாபிமானத்தை வெளிக்காட்டியுள்ளது.

என் பலஸ்தீன சொந்தங்கள் இஸ்லாத்தின் உயரிய மாண்புகளை பேணி, மனிதாபிமானத்தின் உச்சம் இது தான் என்பதை புரிய வைக்கும் வகையில் தீ அனர்த்தம் காரணமாக இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் இஸ்ரேலிய ஓநாய்களுக்கு தங்கள் வீடுகளில் தங்க இடம் கொடுத்து உபசரித்து பலஸ்தீன மண்ணின் மகத்துவத்தை மீண்டும் பறைசாற்றியுள்ளனர்.
ஆனாலும் இந்த அனர்த்தத்தின் பின்னரும் , இயற்கையின் கொடிய தண்டனைக்கு முன்னர் பலஸ்தீன மக்களின் மனிதாபிமானம் அரவணைத்த நிலையிலும்இ இஸ்ரேலிய ஓநாய்களின் மனங்கள் மாறப்போவதில்லை. மீண்டுமொரு கொலைக்களத்தை திறப்பதற்கு அவர்கள் வெகுநாட்கள் எடுத்துக் கொள்ளப்போவதுமில்லை...

எல்லாம் உணர்ந்தும் மனிதாபிமானத்தையும், மார்க்கத்தின் உயரிய போதனைகளையும் வெளிப்படுத்தி நிற்கும் என் பலஸ்தீன சொந்தங்களை மனதார வாழ்த்தி, அவர்களின் மன நிம்மதியான , சுதந்திர வாழ்வுக்கு மனதாரப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..
பதிவு: Ashroffali Fareed
Post a Comment