எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள்
( https://www.facebook.com/ijsfastnews )
( https://www.facebook.com/ijsfastnews )
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் இனி செல்லாது என நேற்று முன்தினம் பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து புதிய நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, அண்டை நாடான நேபாளத்திலும் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்த நேபாள ராஷ்டிர வங்கி தடை விதித்துள்ளது. நேபாளத்திலுள்ள இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் பெரும்பாலும் இந்திய ரூபாய் நோட்டுகளையே மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் அதிரடியால் நேபாளத்திலும் அதன் தாக்கம் காணப்பட்டதால் இந்த அதிரடி உத்தரவை நேபாள ராஷ்டிர வங்கி அறிவித்துள்ளது.
2002ம் ஆண்டு முதல் இந்திய ரூபாயை பயன்படுத்தாத நேபாள மக்கள் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் பயன்படுத்துவதற்கு நேபாள அரசு அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.







Post a Comment