காதலிக்க மறுத்த பெண்ணின் பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பித்து ஆபாசமான கருத்துக்களை பதிவிட்ட பொறியியல் மாணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கும் வம்சிகிருஷ்ண யாதவ் என்ற மாணவன், அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
அந்த பெண்ணின் சகோதரனின் நண்பர்கள் மூலம் அறிமுகமான யாதவ், பெண்ணின் சகோதரனை பார்க்க வருவது போல் வீட்டிற்கு வர தொடங்கியுள்ளார். இப்படி வரும் போது பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண் தன்னை விட்டு விலகி இருக்கும்படி எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த யாதவ் அப்பெண்ணை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவரது பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கை தொடங்கியுள்ளார். அப்பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றி அவரை ஒரு விபச்சாரி போல சித்தரித்து ஆபாசமான கருத்துக்களையும், பதிவிட்டுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் யாதவை கைது செய்தனர். மேலும் யாதவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment