-பின்த் முஹம்மது அப்துர் ரகுமான்,இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகம்-
இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவ மாணவிகளைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் தங்களது மார்க்கத்தை பின்பற்ற தவறியவர்களாகவே உள்ளனர். அதிலும் குறிப்பாக பெண் மாணவிகளின் நிலையே மிகக் கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது. இந்த விடயத்தில் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ் ஒன்றைக் குறிப்பிடுவது சாலப் பொருத்தமாக இருக்கும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'நான் நரகில் அதிகமாக பெண்களையே கண்டேன்' இந்த ஹதீஸ் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் நிலையாக நிறுத்தப்பட வேண்டியதாகும்.உண்மையிலேயே பெண்ணானவள் எந்தளவுக்கு கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் வாழ்கின்றாளோ அந்தளவிற்கு அவளது அந்தஸ்தானது இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்து கொண்டே செல்லும். ஆனால் இன்று எமது சகோதரிகள் அவற்றை உணராதவர்களாகவே உள்ளனர். இஸ்லாமிய மார்க்கமானது பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும், யார் யாருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறான ஆடை அமைப்பை பேணிக் கொள்ள வேண்டும் என்றவாறான அனைத்து விடையங்களையும் அணுவணுவாக கற்றுத் தந்துள்ளது. இருப்பினும் அவற்றையெல்லாம் அறிந்தும் அறியாதவர்கள் போல் வாழ்கின்ற முஸ்லிம் மாணவிகளையும், பெண்களையும் பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.இன்றய கால கட்டத்தில் முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கியுள்ள முஸ்லிம் மாணவிகளையும் அவர்களது நடைமுறைகளையும் பார்க்கும் போது கேவலமாக உள்ளது. பல்கலைக்கழகங்களில் அந்நிய ஆண்களுடன் நடந்து கொள்கின்ற முறைகளையும், அவர்கள் உடுத்தும் ஆடைகளையும் காணும் போது நரகத்தை நேரில் காண்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது. அந்தளவிற்கு கேவலமான முறையில் அதிகமான முஸ்லிம் மாணவிகள் நடந்து கொள்வதை அவதானிக்கலாம். அவர்களை முஸ்லிம்கள் என்று கூறினனால் அது முஸ்லிம் சமூகத்திற்கே பெரும் இழுக்காக இருக்கும். இந்த விடயத்தில் அம் மாணவிகளை மாத்திரம் குறை கூறுவது என்பது பொருத்தமற்ற ஒன்றாகவே இருக்கும் எனலாம். ஏனெனில் ஒவ்வொரு மாணவர்களையும் அவர்களது குடும்பப. பின்னணியுடன் எடுத்து நோக்கும் போது அவர்களது நடைமுறைகளுக்கு அவர்களது குடும்பம் ஒத்துப் போகக் கூடியதாக இருப்பதை அவதானிக்கலாம். அது சிறப்பாக இருந்தாலும் சரி, சீர்கேடாக இருந்தாலும் சரி.இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். 'ஒரு பல்கலைக்கழக மாணவன் தன் வேலை நிமிர்த்தம் கொழும்புக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது அவரது அருகில் இருந்த இருக்கையில் ஒரு தந்தை அமர்ந்து கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்கும் போது அந்த தந்தை கூறினார் 'இப்பெல்லாம் பொம்புள புள்ளகள் தான் கூடதலா ரniஎநசளவைல கு போறாங்க என்ன மகன்' என்றார். அதற்கு அந்த மாணவன் 'ஓம் உண்மை தான். பெண்கள் நல்லா படிசிருந்தா குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவாங்க தானே' என்றார். அதற்கு அந்த தந்தை 'ஓம் மகன் அது மட்டுமில்லை, இப்பெல்லாம் பொம்புள புள்ளகள் ரniஎநசளவைல கு போனா பெத்தவங்களுக்கு கவல இல்ல. ஏனென்டா அங்க போனா சீதனம் குடுக்காம, ஊடு கட்டாம, படிச்ச மாப்பிளயும் எடுத்திடுவாங்க என்னா. ஏன்ட மகளும் இந்த வருசம் யஃட நஒயஅ எழுதிருக்காள். எப்பிடியாவது அவளும் ரniஎநசளவைல கு போயிரணும் என்டு தான் நான் துஆச் செய்றன் மகன்' என்றார்' இதைக் கேட்ட அம் மாணவன் வாயடைத்துப் போனார்.இவ்வாறான மனோநிலையுடைய பெற்றோர்கள் இருக்கும் போது தவறான நடைமுறைகளைக் கொண்ட பிள்ளைகள் இருப்பது என்பது ஆச்சரியப்படும் விடயமல்ல. ஒரு பெண்ணைப் பொறுத்த வரையில் அவள் ஏதோ ஒரு விதத்தில் ஒரு ஆணின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருப்பாள். அந்த ஆண் உண்மையான இஸ்லாமியனாக இருந்தால் அவனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவர்கள் வழி தவற மாட்டார்கள். ஒரு தந்தைக்கு தன் மக்களை, ஒரு கணவனுக்கு தன் மனைவியை, ஒரு சகோதரனுக்கு தன் சகோதரிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவர்கள் ஆண்கள் எனக் கூறிக் கொள்ளவே தகுதியற்றவர்களாக இருப்பார்கள்.(கட்டுப்படுத்தியும் அதற்கு அடிபணியாதவர்களும் உள்ளனர். அது விதிவிலக்கானவர்கள்)இதனை வைத்துக் கொண்டு பெண்கள், தாங்கள் வழி தவறியதற்கு எங்களை கட்டுப்படுத்தாமையே காரணம் எனக் கூறிக் கொள்ள முடியாது. ஏனெனில் தங்களால் சுயமாக தங்களது தேவைகளை, கடமைகளை நிறைவேற்றிக் கொள்கின்ற போது ஏன் தங்களது மானத்தை, ஒழுக்கத்தை, ஈமானைக் காத்துக் கொள்ள முடியாது??? முடிவில் தெளிவாவது என்னவென்றால், தங்களது பிழைகள், குற்றங்களுக்காக பிறரை குறை கூறுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். தூங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் தாங்களே பொறுப்பானவர்கள் என்பது நிதர்சன உண்மையாகும்.இன்றய கால கட்டத்தில் பல்கலைக் கழகங்களுக்கு அதிகமாக பெண்கள் செல்வதை அவதானிக்கலாம். அதில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் உள்ள பல்கலைக் கழகங்களில் தான் அதிகமாக பெண் மாணவிகள் சீர்கெட்டுப் போயுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் ஆடை அணிந்தும் அணியாதவர்கள் போல் திரிகின்ற அவல நிலையைப் பார்க்கும் போதும், சமூக வலைத்தளங்களில் நுழைந்து தங்களைத் தாங்களே தொலைத்து அழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதும், அந்நிய ஆண்களுடன் எவ்வித வெட்கமோ, கூச்சமோ இன்றி நடந்து கொள்வதைப் பார்க்கும் போதும் உண்மையான ஈமானிய உள்ளங்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றன. இவ்வாறு அரை குறையாகத் திரிவதன் மூலமும், அபாயாக்கள் என்ற பெயரில் எதைஎதையோ எல்லாம் அணிந்து திரிவதன் மூலமும் ஆண்களை நாம் கவர்ந்து தங்கள் பக்கம் ஈர்துக் கொள்ளலாம் என எண்ணுகின்றனர். அவர்கள் நினைப்பதும் நடைபெறும். ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு ஈர்க்கப்பட்டு வரும் ஆண்களும் ஈமானில் குறையுடையவர்களாகவும், ஒழுக்கத்தில் குறையுடையவர்களாகவும் இருப்பார்கள். இதனை அனைவரும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். காரணம் அல்லாஹ் அல்குர்ஆனில் 'கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும், கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும், இன்னும் பரிசுத்தமான பெண்கள் பரிசுத்தமான ஆண்களுக்கும், பரிசுத்தமான ஆண்கள் பரிசுத்தமான பெண்களுக்கும்(தகுதியானவர்கள்)'(சூறா நூர்:26) என்று கூறியுள்ளான். எனவே மனிதனின் வாக்கு பொய்யாகலாம் ஆனால் அல்லாஹ்வின் வாக்கு ஒருக்காலும் பொய்யாகாது சகோதரர்களே!...இறுதியாக, இவ்வாறு பல்கலை கழகங்களில் ஒழுக்கக் கேடாக நடக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்தியில் ஒழுக்கத்துடனும், ஈமானுடனும் அல்லாஹ்வைப் பயந்து வாழ்கின்ற முத்தான மாணவ மாணவிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். அதிவிலையுயர் பொருட்களை எளிதில் காணவும் முடியாது, எளிதில் பெற்றுக் கொள்ளவும் முடியாது. ஆது போல் விலை மலிவுள்ள பொருட்களை எளிதில் காணவும் பெற்றுக் கொள்ளவும் முடியும். அவ்வாறே ஒழுக்கமும் ஈமானும் நிறைந்தவர்களுக்கும் அவை இல்லாத சீர்கெட்டவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் காணப்படும். இவ்வுலகில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் முன்மாதிரிகளாகவே இருக்கின்றனர். அது ஒன்றில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இருக்கும். அல்லது எவ்வாறெல்லாம் வாழக்கூடாது என்பதற்கான முன்மாதிரியாக இருக்கும். இதில் நாம் எந்த வகையைச் சார்ந்தவர்கள் என்பதை நாமே தீர்மானித்துக் கொள்ள முடியும்.மனிதன் மனிதனாக வாழ்ந்தால் இவ்வுலகில் பிரச்சினைகள் இருக்காது....பெண் பெண்ணாக வாழ்ந்தால் சீர் கேடுகள் இருக்காது....பெண்கள் விழித்துக் கொண்டால் உலகம் தானாக விழித்துக் கொள்ளும்....'ஞாபகமூட்டுங்கள் ஞபகமூட்டுவதானது முஃமின்களுக்கு பயனளிக்கும்'(சூறா தூர்:55)
JM
Post a Comment