Ads (728x90)



மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் உள்ளது பெலூர்.  இந்த பகுதியைச்  சேர்ந்த இளம் பெண் மதுதிவாரி. வயது 27. இவர் வசித்து வந்த வீடு முதல் மாடியில் உள்ளது. இந்நிலையில் இவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு, பால்கனியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது மரணம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது கணவர் இவரை பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். முன் வரிசையில் நிற்கச் சொல்லி உள்ளார். மாலை பள்ளியில் இருந்து குழந்தையை கூட்டி வந்த பிறகு, உனக்கு பதிலாக நான் வரிசையில் நிற்கிறேன் என கணவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஏ.டி.எம் சென்ற மது திவாரி, ஏ.டி.எம். பூட்டி இருந்ததை பார்த்து, பணம் இல்லாமல் கணவருடன் பிரச்சனை ஏற்படும் என பயந்து தற்கொலை செய்து கொண்டதாக பெங்காலி பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment