தேர்தல் பிரச்சாரங்களில் எதிரணி வேட்பாளர்களை சரமாரியாக விமர்சனம் செய்வது வாடிக்கையான ஒன்று தான்.
ஆனால், டொனால்டடு டிரம்பின் பிரச்சாரமும், அவர் பேசிய அதிரடி கருத்துக்களும் எதிரணி வேட்பாளர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பிரச்சாரத்தின்போதும் அதற்கு முன்னதாகவும் டொனால்டு டிரம்ப் பேசிய 10 சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி உள்ளார்.
* நகரின் முக்கியப்பகுதியில் நின்று மக்களை துப்பாக்கியால் சுட்டாலும் எனக்கு தேர்தலில் வாக்குகள் குறையாது(ஜனவரி 23, 2016).
* உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு கீழே விழுந்ததை நான் பார்த்தேன். அதே சமயம், இத்தாக்குதலுக்காக நியூஜெர்ஸி நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகமாக கொண்டாடியதையும் நேரில் பார்த்தேன்(நவம்பர் 21, 2015)
* தன்னுடைய கணவனை திருப்தி செய்யாத ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க மக்களை எப்படி திருப்தி செய்வார்?(2015, டுவிட்டர் பதிவு)
* சிரியா அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பான ஹிலாரியின் ரகசிய பேச்சை கேட்டேன். அவர்களை அனுமதிக்க கூடாது. ஏனெனில், அவர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள்(அக்டோபர் 24, 2016)
* இந்த தேர்லில் வெற்றி பெற ஊடகம் உதவியுடன் ஹிலாரி பல்வேறு சூழ்ச்சிகளை செய்தி வருகிறார். வாக்களிக்கும் இடங்களிலும் இதையே செய்வார்(அக்டோபர் 16, 2016)
* அருவெறுக்கத்தக்க அலிசியா எம் என்பவருக்கு குடியுரிமை வழங்கவும், அவருடன் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கவும் ஹிலாரி உதவினாரா?(செப்டம்பர் 30, 2016)
* இஸ்லாம் நம்மை வெறுப்பதாக நினைக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாம் நம்மை வெறுக்கிறது. இதனை மேலும் மோசமானதாக ஆக்க வேண்டும்(மார்ச் 9, 2016)
* அமெரிக்காவில் நுழையும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களை தடுக்க வேண்டும். ஏனெனில், இஸ்லாமியர்களில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்கர்களை வெறுக்கிறார்கள்(டிசம்பர் 7, 2015)
* மெக்சிகோ நாட்டில் நுழைந்துள்ளவர்களை அந்நாடு திருப்பி அனுப்புகிறது. ஆனால், தீயவர்களை மட்டுமே தவிர நல்லவர்களை அல்ல. இதுபோன்றவர்களை நாமும் திருப்பி அனுப்ப வேண்டும். ஏனெனில், அவர்கள் போதை பொருளை கொண்டு வருகின்றனர். குற்றங்களை கொண்டு வருகின்றனர். இவர்கள் கற்பழிப்பவர்கள். ஆனால், இவர்களில் சிலர் நல்லவர்களும் உள்ளனர்(ஜூன் 16,2015)
* அரசியல் ரீதியாக கூறினால் ஒருவரின் தோற்றம் முக்கியமானது இல்லை. ஆனால், என்னை பொருத்தவரை ஒருவரின் தோற்றம் முக்கியமானது தான். ஏனெனில், ஒருவர் அழகாக இல்லை என்றால் அவரால் வேலையில் நீடிக்க முடியாது(2014).
Post a Comment