Ads (728x90)

Image result for trump activitiesஅமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக தெரிவானதும் டொனால்ட் டிரம்ப் செய்த முதல் நடவடிக்கை தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அடிப்படையில் பெரும் தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் கடந்த 2009ம் ஆண்டு சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தன்னுடைய அன்றாட நடவடிக்கைகளை தவறாமல் டுவிட்டரில் பகிர்ந்து வந்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது டுவிட்டர் பக்கம் ஒரு மிகச்சிறந்த பிரச்சார தளமாக இருந்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதும் முதல் முறையாக டுவிட்டர் பக்கத்தை எடிட் செய்து ‘President-elect of the United States’ என தனது புரொபைல் தகவலை மாற்றிக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்றதை அறிவிக்கும் விதமாக தனது cover photo-வையும் உடனடியாக மாற்றியுள்ளார்.
மிகுந்த ஆர்வத்துடனும் விரைவாகவும் டொனால்ட் டிரம்ப் செய்த இந்த மாற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
டொனால்ட் ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்த ஒபாமா: வெள்ளை மாளிகையில் நேரடி சந்திப்பு…

Post a Comment