எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள்
( https://www.facebook.com/ijsfastnews )
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்கும் படம் மாஸ்திகுடி. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இறுதி காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. எனவே இந்த படத்தின் இறுதி காட்சி பெங்களூரு ஊரகம் மாகடி அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் இன்று படமா’கப்பட்டது.
இன்று காலை முதலே திப்பகொண்டனஹள்ளி ஏரியில் படமாக்கப்பட்டது. கிளைமாஸ் காட்சியின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டரில் இருந்து கதாநாயகன் துனியா விஜய் மற்றும் வில்லன் நடிகர்களான அனில், உதய் ஆகிய 3 பேரும் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சி மதியம் 2.45 மணிக்கு பேருமே சுமார் 100 அடி உயரத்தில் இருந்து குதித்தனர். அப்போது 3 பேருமே நீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் பாதுகாப்பு குழுவினர் விரைந்து கதாநாயகன் துனியா விஜயை உடனடியாக காப்பாற்றி கரை சேர்த்தனர். ஆனால் அனில் மற்றும் உதய் ஆகிய இருவரையும் காப்பாற்ற செல்ல வேண்டிய படகு தொழில் நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக கிளம்ப முடியவில்லை. எனவே இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment