கனடா நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாடகர் Michael Buble. இவரது 3 வயது மகன் Noah. இவனுக்கு புற்று நோய் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
ஏற்கனவே உடைந்து போய் இருந்த பாடகர் மேலும் கவலையில் ஆழ்ந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தனது மகனுக்கு புற்று நோய் இருப்பது மிகுந்த கவலையை அளித்துள்ளதாகவும், அதே நேரம் இதில் இருந்து மீண்டு வருவான் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளனர். பாடகர் Michael Buble மேற்குலகம் முழுவதும் பிரபலமானவர். சொத்து மதிப்பு சுமார் 2700 கோடி. இவ்வளவு இருந்தும் பாச மகனுக்கு வந்துள்ள நோய் அவரது நிம்மதியை பறித்து விட்டது. இதைத் தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என கூறி வருகின்றனர்.
நோவா தனது தந்தையுடன் மேடை ஏறி பாடிய பாடல்…
Post a Comment