Ads (728x90)



எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை  விரைவில் அறிமுகம் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிகப்பட்டு வந்தன.
இந்த அடையாள அட்டைகளில் உள்ள 9 இலக்கங்கள், நான்கு பாகங்களாக பிரிக்கப்படும்.
இதன்படி முதல் பாகத்தில் உள்ள இரண்டு எண்கள், நபரின் பிறந்த ஆண்டை குறிக்கும்.
இரண்டாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபர் பிறந்த ஆண்டின் ஜனவரி மாதம் 1ம் திகதி முதல், அவரது பிறந்த தினம் வரையில் உள்ள நாட்களின் எண்ணிக்கையை குறிக்கும்.
அத்துடன் மூன்றாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபரின் பால்நிலை குறித்த தகவலை கொண்டிருக்கும்.
தற்போது  12 இலக்கங்களை கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு ஆங்கில இலக்கம் சேர்க்கப்பட மாட்டாது.
பழைய 9 எண்களைக் கொண்ட நடைமுறை பின்பற்றப்படும் போது, 1916ம் ஆண்டு பிறந்த ஒருவருக்கும், 2016ம் ஆண்டு பிறந்த ஒருவருக்கும் ஒரே அடையாள அட்டை வழங்கப்படும் நிலை காணப்படுகிறது.
இதனை தவிர்ப்பதற்காகவே இந்த 12 இலக்கங்களை கொண்ட அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
எவ்வாறாயினும், புதிய எண்தொடர் கொண்ட அடையாள அட்டையைபெற்றுக் கொள்ளும் வரையில், தற்போதுள்ள அடையாள அட்டை செல்லுபடியாகும் என்றும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )


இலங்கை தேசிய அடையாள அட்டை
பெற்றுக் கொள்ளத் தேவையானவை     இலங்கை குடியுரிமைதேசிய அடையாள அட்டை (சுருக்கம்: தே.அ.அ [NIC]) என்பது இலங்கையில் பாவிக்கப்படும் அடையாளப்படுத்தலுக்காக ஆவணமாகும். இலங்கை குடியுரிமை பெற்ற 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும். தே.அ.அ ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படுகிறது. ஆட்களைப் பதிவு செய்தல் சட்ட இலக்கம் 1968 இன் 32 சேர்க்கப்பட்ட சட்ட இலக்கங்கள் 1971 இன் 28 மற்றும் 37, சட்ட இலக்கம் 1981 இன் 11 ஆகியவற்றால் தேசிய அடையாள அட்டை பாவனை மற்றும் வெளியீடு சட்டமாக்கப்பட்டுள்ளது.
தற்போது தேசிய அடையாள அட்டை வைத்திருத்தல் எப்போதும் வைத்திருப்பது கட்டாயமாகவுள்ளது. பாதுகாப்புப் பிரிவினருக்கு சோதனை மற்றும் பிற சந்தர்ப்பங்களில் இது காட்டப்படல் வேண்டும். இது தவறும்பட்சத்தில் தடுத்து வைக்கப்பட முடியும். சில அரச நடைமுறை மற்றும் வணிப பரிமாற்றல்களின்போது இது முக்கிய ஆவணமாகவுள்ளது. இது தவறும்போது குறிப்பிட்ட விடயங்கள் தடுக்கப்படலாம். கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் (வயது 16க்கு மேல்), சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும்போதும் (வயது 18க்கு மேல்) மற்றும் தேர்தல் வாக்களித்தலின்போதும் (வயது 18க்கு மேல்) இது முக்கிய ஆவணமாகும்.[1]
தேசிய அடையாள அட்டை இலக்கம்
ஒவ்வொரு தேசிய அடையாள அட்டையும் தனித்த 10 குறிகளைக் கொண்டு, இதன் அமைப்பு 000000000அ (0 வரும் இடங்களில் எண்களும், அ வருமிடத்தில் ஓர் ஆங்கில எழுத்தும்) போன்று காணப்படும். முதல் மூன்று குறிகளும் குறித்த நபரின் பிறந்த ஆண்டின் கடைசி எண்களைக் குறிக்கும்(எ.கா: 1988 ஆம் ஆண்டு எனில் 88xxxxxxxx). கடைசி எழுத்து பொதுவாக 'V' அல்லது 'X' என்று காணப்படும். இந்த இலக்கம் தனியொருவரை அடையாளப்படுத்தும் தனித்துவமான இலக்கம். இது அமெரிக்காவின் சமூகப் பாதுகாப்பு இலக்கத்தை ஒத்தது.
அடையாளப்படுத்தல்
    அட்டையின் மேல் மையத்தில் "இலங்கை" என்ற எழுத்து சிங்களத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.
    அட்டையின் மேல் வலது பக்கத்தில் ஊதா நிறத்தில் எண் தே.அ.அட்டைக்கு விண்ணப்பித்தவரின் மாகாணத்தைக் குறிக்கும். இந்த எண்கள் 1-9 வரை காணப்படும். இவ்வெண்கள் பின்வருமாறு மாகாண அடிப்படையில் அமைந்திருக்கும்:
    1. மேற்கு மாகாணம்
    2. மத்திய மாகாணம்
    3. தெற்கு மாகாணம்
    4. வடக்கு மாகாணம்
    5. கிழக்கு மாகாணம்
    6. வடமேற்கு மாகாணம்
    7. வட-மத்திய மாகாணம்
    8. ஊவா மாகாணம்
    9. சபரகமுவா மாகாணம்
சிறுபான்மையினரும் தேசிய அடையாள அட்டையும்
இனப்பிரச்சனை யுத்தமாக நடந்த கொண்டிருந்தபோது சிறுபான்மையினர் குறிப்பாக தமிழர் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க தேசிய அடையாள அட்டையினையே முக்கிய ஆவணமாகக் கொண்டிருந்தனர்.[2]
உசாத்துணை மற்றும் வெளி இணைப்பு
    ↑ [1]இலங்கை மக்களின் முக்கிய ஆவணம் தேசிய அடையாள அட்டை
    ↑ [2]இலங்கையில் தேசிய அடையாள அட்டையும் அதன் பிரயோகமும்
    ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்
    அஞ்சல் அடையாள அட்டை
இதனையும் பார்க்க

தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளுதல்
தேசிய அடையாள அட்டையை பெறும் போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய  காரணிகள்
தேசிய அடையாள அட்டையினை பெற இருக்கின்ற அனைத்து விண்ணப்பதாரிகளும் உரிய விண்ணப்பத்தையும் தேவையான அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ள கீழ் வரும் உத்தியோகத்தரில் ஒருவரிடம் செல்ல வேண்டும்.
01. விண்ணப்பதாரி தான் நிரந்தரமாய் வதியும் பிரிவுக்குட்பட்ட கிராம சேவகரை,
02. பெருந்தோட்டத்தில் வதிவோர் தமது தோட்ட அதிகாரியினை,
03. பாடசாலை விண்ணப்பதாரியாயின் தமது பாடசாலை அதிபரை,
இதற்கமைய தான் பெற்றுக் கொண்ட விண்ணப்பத்தை பூரணமாக்கி, தேவையான ஆவணங்களை இணைத்து மேற்காட்டிய உத்தியோகத்தரிடம் கையளிக்கவும். இச்சந்தர்ப்பத்தில் தான் பெற எதிர்பார்க்கும்  அடையாள அட்டைக்குரிய விண்ணப்பப்படிவத்தை பாவிக்க வேண்டும்.

1.    முதல் தடவை தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல்
                       (விண்ணப்பப்படிவம் இல. 01)
2.    சேதமடைந்த அல்லது அடையாள அட்டை திருத்தம் மேற்கொள்ள தேவையாயின்  அடையாள     அட்டைக்கு விண்ணப்பித்தல்
        (விண்ணப்பப்படிவம் இல. 08 )
3.    சரியான காரணத்திற்கமைய இணைப்பிரதி தேசிய அடையாள அட்டையைப்                பெறுவதற்கு விண்ணப்பித்தல் (விண்ணப்பப்படிவம் இல. 07 )
01. முதல் தடவை தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல்
   (அ) இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
   (ஆ) 16 வயது பூரணமாக இருத்தல் வேண்டும்.
முதல் தடவை அடையாள அட்டை பெறுவதற்காக ஆ.ப.தி 01 விண்ணப்பப்படிவத்தை (வெள்ளை நிறம் அல்லது வெள்ளை நிறத்தை ஒத்தது) யும் கீழ்வரும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
1.1    விண்ணப்பதாரி 50 வயதுக்கு குறைந்தவராயின் கட்டாயமாக பிறப்பத்தாட்சிப் பத்திரத்தையோ அல்லது மேலதிக மாவட்ட பதிவாளர் மூலம் வழங்கப்பட்ட உத்தேச வயதுச்சான்றிதழ்.
    *  பாடசாலை விலகல் சான்றிதழ்.
    *  ஞானஸ்நான சான்றிதழ்.
    *   விண்ணப்பதாரியின் பிறந்த தினத்தை குறிப்படுகின்ற பிள்ளையின்                           பிறப்புச்சான்றிதழின் புகைப்படப்பிரதி.
    *  பிறப்புச்சான்றிதழின் கிடைத்த ஒரு பகுதி.
    * இலங்கைப் பிரஜாவுரிமைச் சான்றிதழ். ( பிறந்த தினம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்)
    * தோட்டத்தினை விட்டுச் சென்றமைக்கான சான்றிதழ். ( பிறந்த தினம்   குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்)
    *  கடவுச்சீட்டில் உரிய பக்கத்தினை உறுதிப்படுத்திய பிரதி.
    *  தோட்ட அதிகாரி மூலம் வழங்கப்பட்ட பதிவு அட்டை.
    *  ஜாதக குறிப்பேடு.
1.2 பௌத்த பிக்குமார்களாயின் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்க பெற்ற சாமனேரு  சான்றிதழ் அல்லது உப சம்பத்தா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
   (ஏனைய குருமார்கள் தாம் குருமார் என்பதனை உறுதி செய்யும் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்)
  1.3 விண்ணப்பதாரி திருமணமான பெண்ணாயின் தனது கணவரின் பெயரினைப் பெற          வேண்டுமாயின் விவாகச்சான்றிதழின் மூலப்பிரதியினையும் புகைப்படப்பிரதியினையும் இணைத்தல் வேண்டும்.
1.4 வெளி நாட்டில் பிறந்தவராயின் இலங்கை பிரஜாவுரிமையைப்பெற குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடமிருந்து பெற்ற சான்றிதழும் (CIT) அதன் பிரதியும்.
1.5   1 3/8” * 7/8 அளவுள்ள வர்ணப்புகைப்படங்கள்.
1.6   முத்திரைக் கட்டணம்
     * 17 வயதுக்கு குறைந்த  விண்ணப்பதாரியாயின் ரூபா 3.00 பெறுமதியான   முத்திரையும்    
     * 17 வயதுக்கு மேற்பட்ட  விண்ணப்பதாரியாயின்  ரூபா 13.00 பெறுமதியான  முத்திரையும்
1.7   தமது நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
     * கிராம உத்தியோகத்தர் மூலம் வழங்கப்பட்ட வதிவுச் சான்றிதழ்.
     இச்சான்றிதழ்கள் இல்லாதவிடத்து மட்டும் விண்ணப்பதாரியின் பெயர் குறிப்பிடப்பட்ட கீழ்   வரும் ஒன்றேனும் முடிந்தளவு சமர்ப்பிக்க வேண்டும்.
•     வாக்காளர் பெயர் பட்டியலில் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
•     வங்கிக் கணக்கின் மாதாந்த அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
•     தொலை பேசி கட்டண பற்றுச்சீட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
•     காணி அல்லது வீட்டின் உரிமை தொடர்பான உறுதியின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
•     வாடகை அல்லது காணி குத்தகை வீடாயின் அதற்குரிய ஒப்பந்தம்.
•     வரிப்பணம் செலுத்திய பற்றுச்சீட்டு.
•     தற்காலிக வதிவாளர் தொடர்பாக பொலிஸில் அறிவித்த கடிதத்தின் பிரதி.
1.8    தனது தொழிலை அடையாள அட்டையில் குறிப்பிட வேண்டுமாயின் அதற்குரிய சேவைச் சான்றிதழ்.
02.    பழுதடைந்த அடையாள அட்டைக்கான பிரதி அடையாள அட்டை பெறுதலும், அடையாள     அட்டையில் உள்ள விபரத்தை திருத்தம் செய்தலும்
திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டையை விண்ணப்பதாரியின் வேண்டுகோளுக்கேற்ப கீழ் வரும் காரணங்களுக்காக திருத்தம் செய்து கொடுக்கப்படும்.
1.    முதற் தடவை பெற்ற தேசிய அடையாள அட்டையிலுள்ள புகைப்படத்தை காட்டிலும் தற்போது ஆளின் உருவம் வேறுபட்டிருத்தல்.
2.    பெயரை மாற்றிக் கொள்வதற்கான தேவை ஏற்படல்.
3.    வதிவிடம் மாறியதால் விலாசம் மாறுபடல்.
4.    தொழில் வேறுபட்டிருப்பின் அல்லது தற்போதுள்ள பதவி வேறுபட்டிருப்பின் அதனை அடையாள அட்டையில் சேர்த்துக்கொள்ளல்.
5.    முதல் அடையாள அட்டையில் பின் பக்கத்திலுள்ள விபரங்கள் தெளிவற்று போதல்.
6.    பல்வேறு காரணங்களால் அடையாள அட்டை சேதமடைதல்.
7.    1972 ம் 1973 ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளுக்காக புதிய அடையாள அட்டை பெறல் (1990 நவம்பர் மாதம் 20 ம் திகதி 673/6 இலக்க விஷேட வர்த்தமானி மூலம் இந்த வருடங்களில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.)
    
 
  தேசிய அடையாள அட்டையை திருத்தம் செய்து கொள்ள ஆ.ப.தி.வி.08 விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்த வேண்டும். (இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தால் அச்சிடப்பட்ட விண்ணப்பம்). இதனோடு கீழ்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  2.1    தற்போது பாவிக்கின்ற அடையாள அட்டை.
  2.2    1 3/8” * 7/8 அளவான வர்ணப் புகைப்படம் ஐந்து.
  2.3    15 ரூபா பெறுமதியான முத்திரை.
  2.4  தனது தொழிலை அடையாள அட்டையில் குறிப்பிட வேண்டுமாயின் அதற்குரிய       சேவைச்சான்றிதழ்(03 மாத காலத்தினை கொண்டதாக இருத்தல் வேண்டும்).
      வாண்மைத் தொழில் புரிவோர் தமது தொழிலை உறுதிப்படுத்த அதற்குரிய    சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வர்த்தகராயின் தமது வர்த்தக நிறுவனப் பதிவுச் சான்றிதழின் உறுதிப்படுத்திய பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
  2.5 தற்போது பாவிக்கின்ற தேசிய அடையாள அட்டையின் இலக்கம் தெளிவற்றதாயின் அந்த இலக்கம் பாவித்தமை தொடர்பாக உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள் (சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச் சீட்டு)
  2.6 தற்போது பாவிக்கின்ற தேசிய அடையாள அட்டையின் பெயர், பிறந்த தினம் மற்றும் பிற   விபரங்கள் வேறுபடல் அல்லது பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதியை அல்லது 1.2 பந்தியில் குறிப்பிடப்பட்ட மாற்று ஆவணங்களை மூலப்பிரதிகளுடன் சமர்ப்பிக்கவும்.
  2.7  பௌத்த பிக்குமார்களின் பெயர்களாயின் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் பெற்ற சாம நேர சான்றிதழ் அல்லது உப சம்பதா சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏனைய மதகுருமார் தாம் குருமார் என்பதை உறுதி செய்யும் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  2.8 துறவறத்திலிருந்து சாதாரண வாழ்விற்கு திரும்பியவராயின் பௌத்த சமய    அலுவல்கள் திணைக்களத்தில் இருந்து பெற்ற சாதாரண வாழ்விற்கு திரும்பிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
  2.9 வேறு பெயர்களை தமது தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட வேண்டுமாயின், சமாதான நீதிவானிடமிருந்து பெற்றுக் கொண்ட சத்தியக் கடதாசி, தாம் குறிப்பிட விரும்பும் வேறு பெயர்கள் பாவிக்கின்றமைக்கான எழுத்து மூல சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
03.    காணாமல் போன தேசிய அடையாள அட்டைக்கான இணைப்பிரதியைப் பெறல்
  தேசிய அடையாள அட்டை காணாமல் போன அதற்கான இணைப்பிரதி பெற ஆ.ப.தி.வி 07 என்ற     விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்த வேண்டும். (பச்சை நிறமோ அல்லது பச்சை நிற எழுத்துக்களால் அச்சிடப்பட்ட விண்ணப்பம்). அத்தோடு கீழ் வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
 3.1 தேசிய அடையாள அட்டை காணாமல் போன பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் மூலப்பிரதி (ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்)
 3.2  1 3/8” * 7/8 அளவான வர்ணப் புகைப்படம் ஐந்து.
 3.3  15 ரூபா பெறுமதியான முத்திரை.
 3.4  பிறப்புச் சான்றிதழ் அல்லது ஏலவே 1.2 இல் குறிப்பிடப்பட்ட மாற்று ஆவணங்கள்.
 3.5 தனது தொழிலை அடையாள அட்டையில் குறிப்பிட வேண்டுமாயின் அதற்குரிய சேவைச்சான்றிதழ்(03 மாத காலத்தினை கொண்டதாக இருத்தல் வேண்டும்). வாண்மைத் தொழில் புரிவோர் தமது தொழிலை உறுதி செய்வதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக வைத்தியர், கணக்காளர், சட்டத்தரணி, பொறியியலாளர் போன்றோர் தமது வாண்மைத் தொழில் புரிவோர் பட்டப் படிப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வர்த்தகராயின் தமது வர்த்தக நிறுவனப் பதிவுச் சான்றிதழின் உறுதிப்படுத்திய பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
 3.6 காணாமல் போன அடையாள அட்டை இலக்கம் பாவித்தமைக்கான உறுதிப்படுத்தும் ஆவணங்கள். உதாரணமாக வங்கிப் புத்தகம், கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் போன்ற ஆவணங்கள்.
 3.7  கிராம உத்தியோகத்தர் மூலம் பெறப்பட்ட பதிவுச் சான்றிதழ்.
 3.8 துறவறத்திலிருந்து சாதாரண வாழ்விற்கு திரும்பியவராயின் பௌத்த சமய அலுவல்கள் திணைக்களத்தில் இருந்து பெற்ற சாதாரண வாழ்விற்கு திரும்பிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
  காணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதி பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது பழைய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த விபரங்களே குறிப்பிடப்பட வேண்டும். (ஏலவே இருந்த அடையாள அட்டை பெறுவதில் மதகுருமாருக்கு இதில் விதி விலக்குண்டு.
  உங்களுக்கு கிடைக்கும் தேசிய அடையாள அட்டையை உடன் சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏதேனும் வித்தியாசம் இருப்பின், அதனைக் குறிப்பிட்டு கிடைக்கப் பெற்ற அடையாள அட்டையுடன் கடிதத்தை எமது திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவும். பிழையை சரி செய்ய வேண்டுமாயின் இரு மாத காலத்திற்குள்  அடையாள அட்டை அனுப்ப வேண்டும்.அடையாள அட்டை கிடைத்து இரண்டு மாதத்திற்கு மேற்படின் அதிலுள்ள பிழையைத் திருத்த திருத்தம் செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
 நடமாடும் சேவைகள் அமைச்சுகள், திணைக்களங்கள், பிரதேச செயலகம்கள், நலன்புரிச்சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என்பவற்றில் எமது திணைக்களத்தால் நடாத்தப்படும். தமது தேவையை ஆட்களை பதிவு செய்யும் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கவும். தேவையின் முக்கியத்துவத்திற்கு அமைய நடமாடும் சேவை நடாத்தப்படும்.
 ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பதாரி அதே நாளில் தனது அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும். வேலை நாட்களில் காரியாலய நேரத்தில் (முற்பகல் 8.30 இலிருந்து) இவ் வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு நாள் சேவைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் மு.ப 8.30 முதல் பி.ப 12.00 மணி வரையாகும்.
   வழங்கப்படும் சேவைகள்
•    புதிதாக அடையாள அட்டை பெற்றுக் கொடுத்தல்
•    திருத்தம் செய்வதற்கான அடையாள அட்டை பெற்றுக் கொடுத்தல்
•    இணைப்பிரதி (காணாமல் போன தேசிய அடையாள அட்டைக்கானது) பெற்றுக் கொடுத்தல்.
கட்டணம் ரூபா  500
நடமாடும் சேவை மூலம் கிடைக்கும் நன்மைகள்
•    ஒரே இடத்தில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கல்.
•    ஏதேனும் பிரச்சினைகள் உள்ள விண்ணப்பதாரிகளுக்கு திணைக்கள ஊழியர்கள் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.
•    ஏதேனும் தாமதம் இருப்பின் அதற்கு தீர்வு காணப்படும்.
•    மக்களையும் கிராம உத்தியோகத்தரையும் அறிவூட்டல்.
நடமாடும் சேவையில் பங்கு கொள்ளும் உத்தியோகத்தர்கள்
*    பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்
*   அப் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்
   *  பொலிஸ் உத்தியோகத்தர்கள் (ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் 07     ஆம்  விண்ணப்பத்திற்கான பொலிஸ் அறிக்கை பெறுவதற்காக )
*    சமாதான நீதவான்
*     மேலதிக பதிவாளர் ( பிறப்புச் சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக ) 


எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

Post a Comment