Ads (728x90)



ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க மைதானத்தில் (வாகா) நடைபெற்று வரும் இரு அணிகள்  இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 224 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, ஆட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது.
2 ரன்கள் மட்டுமே பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி 8 விக்கெட்டுகளை  540 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதனை தொடர்ந்து 538 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்து 370 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளை துவங்கிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 361 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 177 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது.

Post a Comment