Ads (728x90)



எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இங்கிலாந்து-வங்காளதேச அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி மற்றும் இந்தியா-நியூசிலாந்து மோதிய ஒருநாள் போட்டி தொடர் முடிவை தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அணிகள், வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது.

இதன்படி டெஸ்ட் அணிகள் தர வரிசையில் இந்தியா (115 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறது. பாகிஸ்தான் (111 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (108 புள்ளிகள்), இங்கிலாந்து (105 புள்ளிகள்), தென்

ஆப்பிரிக்கா (96 புள்ளிகள்), இலங்கை (95 புள்ளிகள்), நியூசிலாந்து (91 புள்ளிகள்), வெஸ்ட் இண்டீஸ் (67 புள்ளிகள்), வங்காளதேசம் (65 புள்ளிகள்), ஜிம்பாப்வே (8 புள்ளிகள்) அணிகள் முறையே 2 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.
பேட்ஸ்மேன் தர வரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் (906 புள்ளிகள்) முதலிடம் வகிக்கிறார். இந்திய வீரர் ரஹானே 6-வது இடம் பிடித்துள்ளார்.

புஜாரா, விராட்கோலி முறையே 14-வது மற்றும் 16-வது இடத்தை பெற்றுள்ளனர். பந்து வீச்சாளர் வரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 900 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

ரவீந்திர ஜடேஜா 7-வது இடம் பெற்றுள்ளார். ஆல்-ரவுண்டர் வரிசையில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 6-வது இடம் பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டி அணிகள் தர வரிசையில் ஆஸ்திரேலியா (118 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்கா (116 புள்ளிகள்), நியூசிலாந்து (112 புள்ளிகள்), இந்தியா (111 புள்ளிகள்), இங்கிலாந்து (107 புள்ளிகள்) முறையே முதல் 5 இடங்கள் வகிக்கின்றன.

பேட்ஸ்மேன் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்திலும், இந்திய வீரர் விராட்கோலி 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 2 இடம் பின்தங்கி 9-வது இடத்தையும், ரஹானே 2 இடம் சரிந்து 30-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பந்து வீச்சாளர் வரிசையில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்களில் அக்ஷர் பட்டேல் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும், அமித் மிஸ்ரா 25 இடங்கள் ஏற்றம் கண்டு 12-வது இடத்தையும், அஸ்வின் 3 இடம் பின்தங்கி 16-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆல்-ரவுண்டர் வரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 8-வது இடம் பெற்றுள்ளார்.


எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/ijsfastnews )

Post a Comment