Ads (728x90)



ஈரோடு அருகேயுள்ள அந்தியூரைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் மாடுகளை வளர்த்து அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார். இவர் ஐந்து பசுமாடுகளை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசு மாடு இரு தினங்களுக்கு முன்பு ஒரு கன்றுக்குட்டியை ஈன்றது.
அதிசயம் என்னவென்றால் அந்த கன்றுக்குட்டிக்கு 7 கால்கள் இருந்தன. அந்த கன்றுக்குட்டிக்கு சாதாரணமாக நான்கு கால்களும், முதுகில் மூன்று கால்களும் இருந்தன. இதை அறிந்த அப்பகுதி மக்கள் இந்த அதிசய கன்றுக்குட்டியை மிக ஆர்வமாக வந்து பார்த்து செல்கின்றனர்.

Post a Comment