Ads (728x90)



இன்னும் மூன்று வருடங்களுக்கு, ஒரு நாள் மற்றும் 'ருவென்டி 20' போட்டிகளில் விளையாட தான் எதிர்பார்த்துள்ளதாகவும், குறித்த காலப்பகுதியில் தனது சேவை இலங்கை அணிக்கு தேவைப்படுமாயின், அதனை வழங்காத் தயார் எனவும் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
காலில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் லசித் மாலிங்க கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக பரவிய செய்தி தொடர்பில் அவரிடம் வினவியபோதே மாலிங்க இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ருவென்டி 20 தொடரின் போதும், மாலிங்க வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனாலும் போட்டிகளில் பங்கேற்றிருக்கவில்லை. பொருத்தமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமையால், அத்தொடர்களில் இலங்கையணி பகுதி நேர வேகப்பந்து வீச்சாளர்களுடனேயே பங்கெடுத்ததுடன், ஒருநாள் மற்றும் ருவென்டி 20 தொடர்களையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment