Ads (728x90)


எமது சூரிய குடும்பத்தில் பூமிக்கு அப்பால் உயிர்கள் இருக்க அதிக சாத்தியம் கொண்ட பகுதியாக வியாழன் கிரகத்தின் நிலவான யுரோபாவை நாசா அடையாளமிட்டுள்ளது.
பனிக்கட்டி நிலவில் பாரிய நிலத்தடி ஏரி இருப்பதற்கான புதிய ஆதாரங்களை வெளியிட்ட நாசா இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி கொண்டு பெறப்பட்ட ஆதாரங்களின் படி யுரோபாவில் இருந்து 100 மைகளுக்கு மேல் விண்வெளிக்கு நீர் வீசி எறியப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
தொலைநோக்கியின் புற ஊதா படங்கள் மூலம் யுரோபாவின் நிலத்தடி நீர் குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. பெரும் அளவான திரவ நீர் இருப்பதைக் கொண்டு அங்கு பூமிக்கு அப்பால் நுண்ணுயிர்களை கண்டுபிடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழனை மூன்றரை நாட்களுக்கு ஒருமுறை வலம் வரும் யுரோபாவில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள நாசா எதிர்பார்த்துள்ளது. அத்துடன் யுரோபாவில் ஆய்வுகளை மேற்கொள்ள எதிர்வரும் ஆண்டுகளில் அங்கு விண்கலம் ஒன்றையும் அனுப்ப நாசா எதிர்பார்த்துள்ளது.
தண்ணீர் கொட்டும் பகுதிக்குள் விண்கலத்தைச் செலுத்தி, அதன் மாதிரிகளைச் சேகரித்து வந்து, அதிலுள்ள உயிர்த்தன்மை குறித்து ஆய்வு நடத்த முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும் யுரோபாவுக்கு எட்டு ஆண்டு பயணம் கொண்ட விண்கலத்தை அனுப்ப 2022 ஆம் ஆண்டிலேயே சாத்தியமாக இருக்கும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது.
வியாழனின் ஆறாவது நெருக்கமான நிலவான யூரோபா சூரியனில் இருந்து 500 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. 

Post a Comment