பல்கலைக்கழக அனுமதிக்காக இம்முறை இணையத்தளம் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மொஹான் டி சில்வா இதனைக் கூறினார்.
தபால் மூலம் பதிவு செய்துகொள்வதற்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதெனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடைமுறை தொடர்பில் மாணவர் கையேட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment