மிக விரைவாக பருவமடைதல் என்பது நகர்ப்புற பகுதியில் வசிக்கும் பெண்கள் மத்தியில் அதிகப்படியாக காணப்படுகிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண் குழந்தைகள் மத்தியில் தான் 8 வயதில் பருவமடையும் நிகழ்வுகள் பரவலாக காணப்படுகிறது.
ஆனால், இன்றளவிலும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மத்தியில் பருவமடைதல் என்பது 15-16 வயதில் தான் ஏற்படுகிறது. நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளுக்கு மத்தியில் இம்மாற்றம் பெரிதளவில் காணப்படுவது ஆச்சரியத்தை அளிக்கிறது.
பெண் குழந்தைகள் வேகமாக பருவமடைதலை Precocious Puberty என கூறுகின்றனர். ஓர் பெண் குழந்தை வேகமாக பருவமடைய போகிறாள் என்பதை, அக்குழந்தையின் மார்பக வளர்ச்சி மற்றும் உடல் பகுதிகளில் வளரும் முடி வளர்ச்சியை வைத்து கண்டறிய முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேகமாக பருவமடைவது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்களுக்கு நிறைய பாதிப்புகளை உண்டாக்குகிறது. இதனால் அடிக்கடி மனநிலை மாற்றங்கள் (Mood Swings), மாதவிடாய் கோளாறுகள் போன்றவை உண்டாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வேகமாக பருவமடைதல் பெண் குழந்தைகள் மத்தியில் பாலிய எண்ணங்கள் அதிகரிக்க பெரும் காரணியாக இருக்கிறது எனவும், இதனால் பெண்கள் மத்தியில் மனநிலை மாற்றங்கள் பரவலாக நிகழலாம் என்றும் கூறுகின்றனர்.
வாழ்வியல் முறை, சுற்றுப்புற தூய்மை கேடு, உணவு முறைகளில் மாற்றம் போன்றவை இதற்கான முக்கிய காரணிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காரணங்கள்
– சிறுவயதில் உடல்பருமன்
– கோழி இறைச்சி அதிகம் உண்பது
– மரபணு மாற்றப்பட்ட காய்கறி, பழங்கள்
– உணவுகளில் Bisphenol A (BPA) கலப்பு
– பூச்சிக்கொல்லி
– சிறுவயதில் அதிக மன அழுத்தம்
பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைதலை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
– தாய்ப்பால் தர வேண்டும்
– சோயா உணவுகளை தவிர்த்தல்
– இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகள் உண்ண வேண்டும்
– பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்
– பிளாஸ்டிக் பெட்டி, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர், உணவு, ஜூஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
– மரபணு மாற்றப்பட்டம், செயற்கை பால் உணவுகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
– செயற்கை சோப்பு கட்டிகளை தவிர்க்க வேண்டும்

Post a Comment