Ads (728x90)






சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு தங்களது ஊதியம் வழங்கப்படாதபோது, போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு சிறை தண்டனையும், கசையடிகளும் வழங்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
சுமார் 50 தொழிலாளர்களுக்கு 45 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரையிலான சிறை தண்டனையை மெக்காவிலுள்ள நீதிமன்றம் ஒன்று வழங்கியுள்ளதாகவும் சிலருக்கு 300 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவுதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோது, பல மாதங்கள் அதிக அளவிலான தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத சவுதி பின்லாடின் என்ற கட்டுமான ஜாம்பவான் நிறுவனத்தோடு தொடர்புடைய வழக்கு தொடர்பிலேயே இவ்வாறு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டள்ளன.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல பேருந்துகள் கோபமடைந்த தொழிலாளர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Image result for saudi arabia flag

Image result for saudi arabia  law
Image result for saudi arabia  law


Post a Comment