
அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி கரிஸாஜில் – ராண்டி. கரிஸாஜில் 25 வாரம் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், குழந்தை எவ்வாறு உருப்பெறுகிறது என்பதை அறிய பென்சில்வானியாவில் உள்ள ஒரு இமேஜிங் சென்டருக்கு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டு அல்ட்ராசோனிக் புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கண்ட அந்த ஜோடி மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்த புகைப்படத்தில் வளர்ந்து வரும் அந்த இரட்டைப் பெண் குழந்தைகள் கரு ஒன்றையொன்று நெருங்கி வந்து முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

அந்த புகைப்படக் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.
Post a Comment