மாணவர்களை மன அழுத்தம் எந்த அளவிற்கு ஆட்டுவிக்கிறது என்பதற்கு உதாரணம் மணிகண்டன்.
புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தான். தேர்வு முடிவு வெளியாவதற்கு 2 நாட்கள் முன்பு அதாவது 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டான்.
aa
aa
இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த மாணவன் 1905 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பள்ளியில் 4வது இடம் பிடித்துள்ளார்.
பெற்றோருடன் நெருங்கிய தொடர்புகள் இல்லாததும், நண்பர்களிடம் மனம் விட்டு பேசாததுமே இதுபோன்ற மாணவர்கள் தற்கொலைக்கு காரணமாக அமைகின்றன.
தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு மாணவர்களுக்கு மன நல பயிற்சி வகுப்புகளை பள்ளி நிர்வாகங்களும், தனியார் அமைப்புகளும் முழு வீச்சில் நடத்தினால் இதுபோன்ற தற்கொலைகளை தடுக்கலாம்.
Post a Comment