தொடர் தோல்விகளுக்காக பெங்களூர் ரசிகர்களிடம் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் மன்னிப்பு கேட்டுள்ளார்.
டிவில்லியர்ஸ், கெயில் என உலகின் தலை சிறந்த வீரர்களை பெற்றிருந்தாலும் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியால் இந்த தொடரில் 2 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை விட்டு ஒரு இடம் கூட முன்னேற முடியாமல் தவித்து வருகிறது.
பெங்களூர் அணியின் இத்தகைய மோசமான ஆட்டத்திற்கு பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பெங்களூர் ரசிகர்களிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், தற்போது அந்த அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெய்லும் பெங்களூர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் இந்த தொடரில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன கெய்லைவிட அதிரடியாக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலர் சுணில் நரைன்னின் ஆட்டத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கிறிஸ் கெய்ல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Post a Comment