அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசித்து வரும் 41வயது நபர் ஒருவர் தனது சொந்த மகளை கற்பழித்த காரணத்திற்காக, அவருக்கு நீதிபதி 1,503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது, பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வாரத்திற்கு 3 தினங்கள் என தொடர்ந்து 4 வருடங்கள் தனது மகளை கற்பழித்து வந்துள்ளார். அந்த பெண் 23 வயதை எட்டியபோது தனது தோழிகளிடம் இதுபற்றி கூறி போலீஸாருக்கு புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து பெற்ற மகளை 4 ஆண்டுகள் கற்பழித்த தந்தை மீது 186 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அந்த நபர் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர் என கருதிய நீதிபதி அந்த குற்றவாளி வெளியில் வர முடியாத அளவிற்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஒரு குற்றவாளிக்கு இப்படி ஒரு சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment