
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை போலீஸார் கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் மாகாணத்தின் பழங்குடியினர் வாழும் Muckleshoot என்ற பகுதியில் ரெனி டேவிஸ்(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகளும் உள்ள நிலையில் இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதி போலீஸாருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதில் ரெனி டேவிஸ் மிகவும் மன உளைச்சலில் உள்ளதாகவும், அதனால் துப்பாக்கி வைத்துக்கொண்டு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் ‘ரெனி டேவிஸ் வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரெனி டேவிஸ் வீட்டிற்கு விரைந்த போலீஸார், ரெனி டேவிஸ் வீட்டை சுற்றி வளைத்தனர். மேலும் உள்ளே என்ன நடக்கிறது என்பதை கண்காணித்த போது 5 மாத கர்ப்பிணியான ரெனி டேவிஸ் தனது கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு இரண்டு பிள்ளைகள் முன்பு அழுதுக்கொண்டு இருந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் பிள்ளைகளுக்கு எதுவும் ஆபத்து நிகழக்கூடாது என்ற நோக்கத்தில் போலீஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து ரெனி டேவிஸை சரமாரியாக சுட்டுள்ளனர்.
இதில் குண்டு காயம் அடைந்த ரெனி டேவிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Post a Comment