Ads (728x90)

Image result for teaching

சகல ஆசிரிய வெற்றிடங்களும் 2019ம் ஆண்டளவில் நிரப்பப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

அனைத்து பாடசாலைகளுக்கும் போதியளவு ஆசிரியர்களை வழங்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியொன்று பின்பற்றப்படும். 13ம் ஆண்டுகள் கட்டாயக் கல்வி தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டம் 2017ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும்.

ஒவ்வொரு பாடசாலைக்கும் தேவையான ஆசிரியர்களை தனித்தனியாக வழங்க தேவையான சட்டங்கள் உருவாக்கப்படும். கற்பிக்கும் தரத்தை உயர்த்துவதற்கு புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்படும்.

ஆசிரியர் பற்றாக்குறையற்ற பாடசாலை கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்தர மாணவ மாணவியருக்கு டெப் வழங்கப்பட உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும்தெரிவித்துள்ளார்.

Post a Comment