
மிஸோரம் மாநிலத்தில் வசித்து வரும் 218 யூதர்கள் இஸ்ரேலுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளனர்.
ஆதி கால இஸ்ரேலிலிருந்து யூத இனத்தைச் சேர்ந்த 10 பழங்குடி பிரிவினர் அங்கிருந்து விரட்டப்பட்டு விட்டனர்.அவர்களில் ஒரு பிரிவுதான் மனசே என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிருந்து விரட்டப்பட்ட இவர்கள் முதலில்சீனாவுக்கும் அதன் பின்னர் வட கிழக்கு இந்தியாவிலும் குடியேறினர். சிலர் மியான்மரில் அடைக்கலம் புகுந்தனர்.
சிரியா, ஈரானிலும் இந்தப் பிரிவைச் சேர்ந்த சிலர் வசித்து வந்தனர். ஆனால் கால ஓட்டத்தில் இப்பழங்குடி பிரிவுயூதர்களின் எண்ணிக்கை மிகவும் சுருங்கிப் போய் விட்டது. இந்த பழங்குடி பிரிவினர் குறித்த விவரங்கள்இஸ்ரேல் அரசிடம் இல்லாததால் இவர்களை யூதர்களாக அங்கீகரிக்க அந்த அரசு தயங்கி வந்தது.இந்த நிலையில் மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு இந்தியாவில் வசித்து வரும் மனசே பிரிவு யூதர்கள்,தங்களையும் யூதர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசைக் கோரி வந்தனர்.
இக்கோரிக்கையைப் பரிசீலித்த இஸ்ரேல் அரசு மனசே பிரிவு குறித்து விசாரணை நடத்தியது. இதன்தொடர்ச்சியாக, இஸ்ரேலிலிருந்து கடந்த ஆண்டு யூத இன தலைமை மதகுருவான ரப்பி ஸ்லோமோ அமர்மிஸோரம் வந்தார்.
மிஸோரம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மனசே பிரிவு யூதர்களை அவர் சந்தித்து, யூதர்களாக மாறிஇஸ்ரேலில் வசிக்க விருப்பமா என்பதை கேட்டறிந்தார். அதற்கு அவர்கள் தாங்கள் யூத இன பழக்கவழக்கங்களையே கடைப்பிடித்து வருவதாகவும், மத நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தலைமை மத குரு அளித்த அறிக்கையின் அடிப்படையில், வட மனசே பிரிவினரையூதர்களாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 218 பேர் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளனர்.அங்கேயே நிரந்தரமாக தங்கவும் முடிவு செய்துள்ளனர்.
அக்டோபர் 3வது வாரத்தில் இவர்கள் இஸ்ரேல் கிளம்புகின்றனர் என்று மிஸோரம் தலைநகர் அய்ஸ்வாலில்உள்ள ஷவே இஸ்ரேல் ஹீப்ரு மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு செல்லவுள்ள மனசே பிரிவினருக்கு அலியா என்ற மதமாற்ற சடங்குகள் நடத்தப்பட்டு யூதர்களாகஅங்கீகரிக்கப்பட்ட பின்னர் இஸ்ரேலில் நிரந்தரமாக குடியேற அங்கீகரிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment