Ads (728x90)




உலகளவில் வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சில செல்போன் மாடல்களின் பயன்பாட்டை முடக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களின் தற்போதுள்ள எண்ணிக்கையை அதிகரிக்க நவீன  தொழில்நுட்பத்துடன் கூடிய வாட்ஸ்அப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் சில செல்போன் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஒத்துழைக்காத நிலையில், அவற்றின் மாடல்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

மேலும், இந்த பயன்பாடு இந்த ஆண்டின் கடைசியில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், இதனால் குறிப்பிட்டுள்ள மாடல்களின் செல்போன்களில் வாட்ஸ் அப் இயங்காது எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் விவரம்:

பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, நோக்கியா சிம்பியன் எஸ்60, ஆன்ராய்டு 2.1 மற்றும் 2.2, விண்டோஸ் போன் 7.1, ஐ போன் 3ஜிஎஸ் மற்றும் ஐஓஎஸ்6 உள்ளிட்ட மாடல்களில் வாட்ஸ்அப் சேவை இந்த வருட டிசம்பர் மாதம் வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment