Ads (728x90)

Image result for விவாகரத்துஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் சார்ஜாவில் உள்ள கடற்கரையில் உள்ள சுற்றுலா பூங்காவுக்கு சென்றனர்.அங்கு இருவரும் கடலில் குளித்தார்கள். அந்த பெண் நன்றாக மேக்-அப் போட்டு அழகாக காட்சி அளித்தார். இதன் காரணமாகத்தான் அவரை வாலிபர் திருமணம் செய்திருந்தார்.ஆனால், கடலில் அவர் குளித்த போது, மேக்-அப் ஒட்டு மொத்தமாக கலைந்து விட்டது. இதனால் அவர் அவலட்சணமாக காட்சி அளித்தார். அவருக்கு கண் இமை முடிகூட இயற்கையாக இல்லை. அதுவும் செயற்கையாகவே பொருத்தப்பட்டு இருந்தது. கடலில் குளித்த போது அதுவும் காணாமல் போய் விட்டது.



மனைவி திடீரென அவலட்சணமாக தோன்றியதை பார்த்ததும் அந்த வாலிபர் கடும் அதிர்ச்சி அடைந்தார். மேக்-அப் போட்டு அழகாக காட்சி அளித்து தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் கருதினார். இது சம்பந்தமாக அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து கேட்டார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது.

Post a Comment