அப்படி தான் நமது உடலும், நாம் அவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், சிறந்த உணவுகள் உண்டு, உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், திடீரென சில தாக்கங்கள் உண்டாக தான் செய்யும்.
இவ்வுலகில் எது அதிசயம் என்று கேட்டால் நமது உடல் தான். எப்படி உருவாகி, காலப்போக்கில் பலவாறு மருவி இப்போது ஒரு மாதிரியான தோற்றத்தில் உலாவி வருகிறோம்.
காலப்போக்கில் நமது உருவம், குணாதிசயங்கள் எப்படி மாறும் என்பதையும் கணிக்க முடியாது. இனி, நம் உடலில் நடக்கும் அதிசயங்கள் பற்றி இதுவரை நாம் அறியாத சில உண்மைகள்…
அதிகாலை
3 மணியிலிருந்து 4 மணிவரையில் தான் நமது உடல் மிகவும் வீக்காக இருக்கிறது. இந்த நேரத்தில் தான் நிறைய பேர் இறக்கின்றனர்.
இரவு
இரவு நேரத்தில் தான் மக்கள் பெரிதும் சோகமான விஷயங்களை விவரித்து உரையாடுகிறார்கள். அது பேசுவதாக இருப்பினும் சரி, குறுஞ்செய்தியாக இருந்தாலும் சரி.
உறக்கத்தில் விழுவது
சில நேரம் உறங்கிக் கொண்டிருப்போம், உறக்கத்தில் இருந்து திடீரென எங்கோ மாடியில் இருந்து விழுவது போன்ற உணர்வு உண்டாகும். இதை ஹைப்நிக் ஜர்க் என்கின்றனர்.
இசை
வார்த்தை அல்லது சொற்கள், குரல் இல்லாத வெறும் இசையை மட்டும் கேட்டுக் கொண்டு நீங்கள் ஏதனும் செயலில் ஈடுபட்டால், அதிக கவனத்துடன், வேலை செய்ய முடியும்.
காதல்
ஆண்களுக்கு ஒரு பெண் மீது காதல் கொள்ள மூன்று நாட்கள் போதும், ஆனால் பெண்களுக்கு 14 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும்.
சமூகத்தள பதிவுகள்
சில போதை பொருட்கள் தன்மை அளவிற்கு ஈடாக, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் உங்களை பற்றி நீங்கள் பதிவு இடுவது, உங்கள் மூளையை ஆக்டிவேட் செய்கிறது.
மொக்கையான கையெழுத்து
புத்தி கூர்மை அதிகம் இருப்பவர்கள் வேகமாக சிந்திப்பார்கள், இந்த காரணத்தால் தான் அவர்களது கையெழுத்து மோசமாக இருக்கிறது. எவ்வளவு வேகமாக அவர்கள் சிந்திக்கின்றனரோ, அவ்வளவு மோசமாக அவர்களது கையெழுத்து இருக்கும்.
சிறந்த நபர்
இந்த வாக்கியத்தை நீங்கள் படித்து முடிக்கும் போது யார் உங்கள் நினைவுக்கு வருகிறாரோ, அவர் தான் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நபர்.
மரணம்
நீங்கள் இறக்கும் அதே நாளில் 1,59,635 பேர் இறப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
7 வருடம்
ஒரு நபருடனான நட்பு 7 வருடத்தை தாண்டிவிட்டால், அது வாழ்நாள் முழுக்க நீடித்து இருக்கும்.
காதல் கண்கள்
உங்கள் காதல் துணையுடன் நீங்கள் நேரடியாக கண்ணோடு கண் தொடர்பு கொண்டிருக்கும் போது, இருவரின் இதயத்துடிப்பும் ஒரே மாதிரி இருக்கும்.
ஐ. லவ் யூ
அதிக நாட்களாக காதலித்து வரும் ஜோடிகள்,, அதிகம் ஐ லவ் யூ சொல்லிக்கொள்ள மாட்டார்கள்.
Post a Comment